கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் இலங்கையில் மென்பொருள் தொழில்துறை மற்றும் தனியார் கல்வித் துறையில் ஒரு முன்னோடியாவார், இவர் இன்போமெற்றிக்ஸ் குழுவின் ஒரு ஸ்தாபகர் மற்றும் தலைவரும் ஆவார்.
இவர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் பல்கலைக்கழக கல்வியினைக் கற்றார். இவர் 1983 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பியதுடன் ஒரு கணினி கம்பனியான இன்போமெற்றிக்ஸ் இனை ஸ்தாபித்தார். இன்போமெற்றிக்ஸ் ஆனது ஒரு மொத்த ஆயத்த தயாரிப்பு தீர்வு கம்பனி, அதன் மூலம் வன்பொருள், மென்பொருள், பயிற்சி மற்றும் பராமரிப்பு என்பன வழங்கப்பட்டன – அதாவது முழு அளவிலான தேவைகள் வழங்கப்பட்டன.
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறிய தகவல் தொழிநுட்ப பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதால் இலங்கையின் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும், இலங்கையில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஒரு பற்றாக்குறை இருந்ததையும் உணர்ந்து கொண்டார். இதற்காக இன்போமெற்றிக்ஸ், 1990 ஆம் ஆண்டு மன்செஸ்டர் மெற்றோபொலிற்றன் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் தகவல் முறைமை மற்றும் கணினி விஞ்ஞானத்தில் தகவல் தொழினுட்ப பட்டங்களை வழங்கியது. பிரிட்டிஷ் பட்டப்படிப்புகளை இலங்கையில் வழங்கிய முதல் நிறுவனமாக இன்போமெற்றிக்ஸ் காணப்பட்டது. ஆகவே இலங்கையில் மூன்றாம் நிலை பிரிட்டிஷ் கல்வியை வழங்கிய ஒரு முன்னோடியாக கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் கருதப்படுகின்றார்.
IIT இன் பழைய மாணவர்கள் தொழில் முனைவோருக்கான வணிகங்களை ஆரம்பிப்பதற்கும் அவர்கள் தமது சொந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் ஊக்குவித்ததாக திரு.விக்ரமசிங்க கூறுகிறார். மூன்றாம்நிலை கல்வி நிறுவனங்கள், சர்வதேச அளவில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ள மற்றும் மிகவும் பொருத்தமான இடங்களில் தனிநபர்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இதன் மூலம் உருவாக்கப்படும் மனித வளங்கள் “சர்வதேச அளவிலான உற்பத்தி”களாகக் கருதப்படுவதால் அந்நிய செலாவணி வருவாய் மற்றும் ஏனைய பொருளாதார நன்மைகளுக்கூடாக இலங்கை மகத்தான நன்மையினை அடையமுடிகின்றது. இலங்கையின் குறிப்பிட்ட முக்கிய இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு இது மிகவும் பொருத்தமானது என கலாநிதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பப் பிரிவு தொழில்துறையில் ஒரு முன்னோடியாகப் பாராட்டப்பட்டார், அத்துடன் 2014 ஆம் ஆண்டு இன்போரெல் இன் போது FITIS இனால் (இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனம்), அவர் ICT தொழில்துறையில் பல ஆண்டுகள் ஆற்றிய சேவைக்காக பாராட்டுக்குரிய அடையாளமாக கருதப்பட்டு விருதளிக்கப்பட்டார்.
சுருக்கமான காணொளி
முழுமையான காணொளி
கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் இலங்கையில் மென்பொருள் தொழில்துறை மற்றும் தனியார் கல்வி முறைமையில் முன்னோடியாக இருக்கிறார், இவர் இன்போமெற்றிக்ஸ் குழுவினது ஸ்தாகபர் மற்றும் தலைவராவார். இவர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் தமது பல்கலைக்கழக கல்வியை கற்றுள்ளார். இவர் சிஸ்டம் அனேலிசிஸ் மற்றும் கம்பியூட்டிங் ஆகியவற்றைக் கற்றுள்ளார். இன்போமெற்றிக்ஸ் ஆனது ஒரு மொத்த ஆயத்த தயாரிப்பு தீர்வு கம்பனி (டோட்டல் ரேன்கீ சொலுசன்), அதன் மூலம் வன்பொருள், மென்பொருள், பயிற்சி மற்றும் பராமரிப்பு என்பன வழங்கப்பட்டன – அதாவது முழு அளவிலான சேவைகள் வழங்கப்பட்டன. கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் 1983 ஆம் ஆண்டு மிகப்பெரிய கம்பனிகளான IBM, ICL மற்றும் Burroughs ஆகியவற்றினை இலங்கையில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் 1983 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிய போது, அந்நேரத்தில், ஒரு வன்பொருள் விற்பனையாளர் வன்பொருளை மாத்திரமும் அதே போல் மென்பொருள் விற்பனையாளர் மென்பொருளை மாத்திரமும்விற்பனை செய்தனர், எனவே வாடிக்கையாளர்களுக்கு கணினி தொடர்பான உதவிகள் தேவைப்படும்போது அது தொடர்பாக யாரை அணுகுவது என தெரிந்திருக்கவில்லை.
ஆகவே, இவரது புதிய கோட்பாட்டின்படி வாடிக்கையாளர்கள் தமக்கு வன்பொருள், மென்பொருள், பராமரிப்பு மற்றும் பயிற்சிகள் தேவைப்படும் போது ஒரு தொலைபேசி அழைப்பினூடாக உதவியினைப் பெற்றுக் கொள்ளும்படியான ஏற்பாடுகளை முன்னெடுத்தார், இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தமது வேறுபட்ட கணினி தேவைகளுக்கு இவர்களை விட்டு வேறு இடங்களை நாட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. இதன் இலக்கு, பணத்தினை செலுத்தும் வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப அனைத்து தேவைகளையும பெறக்கூடியதாக இருப்பதாகும். இன்போமெற்றிக்ஸ் ஆனது வன்பொருள் மற்றும் மென்பொருளினை உள்ளடக்கிய ஒரு உற்பத்தியாக Nixdorf யினை வழங்கியது. இது ஒரு டோட்டல் ரேன்கீ சொலுசன் ஆகக் காணப்பட்டது.
அதன்பிறகு, இன்போமெற்றிக்ஸ், தனிப்பயனாக்கப்பட்ட மென்பொருள் உருவாக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்தது பின்னர் அதற்கான ஒரு இடையூறை எதிர்நோக்கியது. இலங்கையில் சகல தேசிய பல்கலைக்கழகங்களிலும் இருந்து வெளியேறிய தகவல் தொழினுட்பப் பட்டதாரிகளின் எண்ணிக்கை இலங்கையின் தேவைகளை பூர்த்தி செய்ய போதுமானளவு இருக்கவில்லை என்பதால், இலங்கையின் IT பிரிவில் மனிதவள மேம்பாட்டுத் திறன் குறைந்து காணப்பட்டது. அப்போது கலாநிதி என்.டபிள்யூ.என்.ஜெயசிறி அவர்கள் MISற்குப் பணிப்பாளராகவிருந்த வணிக முகாமைத்துவத்திற்கான தேசிய நிறுவகத்தினை (NIBM) மட்டுமே நம்பவேண்டியிருந்தது. NIBM ஆனது மாணவர்களுக்கு கணினியியலில் ஆறு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு பின்னர் இன்போமெற்றிக்ஸ் இனால் வேலைக்கமர்த்தப்பட்டு மேலும் பயிற்சியளிக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையின் காரணமாக பிரிட்டிஸ் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் இலங்கையில் கணினி பட்டதாரிகளை உருவாக்குவதற்கான எண்ணத்தினை கலாநிதி விக்ரமசிங்க அவர்கள் கொண்டுவந்தார்.
எனவே, 1990 ஆம் ஆண்டில் இன்போமெற்றிக்ஸ் நிறுவனம் மன்செஸ்டர் மெற்றோபொலிற்றன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து தகவல் முறைமைகள் மற்றும் கணினி விஞ்ஞான பாடக் கற்கைகளுக்கான பட்டப்படிப்புக்களை வழங்கியது. இன்போமெற்றிக்ஸ் இலங்கையில் பிரிட்டிஸ் பட்டப்படிப்புகளை வழங்கிய முதல் நிறுவனமாக இருந்தது. எனவே இலங்கையில் பிரிட்டிஸ் மூன்றாம் நிலைக்கல்வியெனும் கருப்பொருளை வழங்கிய முன்னோடியாக கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் கருதப்பட்டார். ஆனால் புதியதொரு நிறுவனம் பட்டப்படிப்பு கல்வியினை வழங்குவதால் மக்களிடையே நம்பிக்கையில்லா நிலையினை ஏற்படுத்தியதனாலும், கற்கைநெறிகளை கற்பிப்பதற்கும் பயிற்றுவிப்பதற்கும் போதுமான ஊழியர்களை கண்டறிவதில் கடினத்தன்மை காணப்பட்டமையினாலும் இம் முயற்சியை முன்னெடுப்பதில் பாரிய இடையூறு ஏற்பட்டது. எனவே இதற்காக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இவை தொடர்பில் நம்பிக்கையை கட்டியெழுப்பவேண்டிய நிலை ஏற்பட்டது. கலாநிதி விக்ரமசிங்க அவர்களால் உருவாக்கப்பட்ட கணினி கற்கைகளுக்கான இன்போமெற்றிக்ஸ் நிறுவனம் தற்போது தொழினுட்பத்திற்கான இன்போமெற்றிக்ஸ் நிறுவனம் (IIT) என அழைக்கப்படுகின்றது. இவ் முன்னெடுப்புகளின் போது பின்னாளில் கல்வி அமைச்சராக இருந்த திரு.லலித் அதுலத்முதலி அவர்கள் பாரிய ஆதரவினையும், ஆலோசனைகளையும் வழங்கி வரையறைகளையும் விளக்கி தன்னை சரியான பாதையில் பயணிக்க உதவியதாக கலாநிதி விக்ரமசிங்க அவர்கள் நினைவு கூர்கின்றார். இன்போமெற்றிக்ஸ் நிறுவனம் பிரிட்டிஸ் பட்டப்படிப்புகளை இலங்கையில் வழங்கியமையால், ஒருவர் இங்கிலாந்து சென்று அப்பட்டத்தினைப் பெறுவதற்கு செலவு வேண்டிய தொகையிலும் பார்க்க குறைவான செலவினை இன்போமெற்றிக்ஸ் கொண்டிருந்தமை பிரதான நன்மையாக காணப்பட்டது. இது ஒரு உள்வாரிப் பட்டப்படிப்பாக இருந்தது. மன்செஸ்டர் மெற்றோபொலிற்றன் பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்புக் கற்கைகள் இலங்கையில் வழங்கப்பட்டன – இது இங்கிலாந்தில் பிரிட்டிஸ் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட பட்டங்களுக்கு நிகராக இருந்தது. பட்டம் பெற்றவர்களின் பெயர் விபரங்கள் பிரிட்டிஸ் பல்கலைக்கழகங்களில் பழைய மாணவர்களாக பட்டியலிடப்பட்டன. IIT இன் பட்டதாரிகள் தமது பட்டப்படிப்பின் போது “தொழில்துறை ஆண்டு” என்பதற்கிணங்க தொழில்துறை நிறுவனங்களில் பயற்சி பெற வேண்டும். இது ஆரம்பத்திலிருந்தே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்ததாகவும் இந்த எண்ணக்கருவினை நாட்டிலுள்ள பலகலைக்கழகங்களும் பின்பற்றி வருவதாகவும் இதன் நோக்கம் தகுதி வாய்ந்த, நம்பிக்கையான தொழில்துறை நிபுணர்களை உருவாக்குவதேயாகும் எனவும் கலாநிதி விக்ரமசிங்க அவர்கள் கூறுகின்றார். கலாநிதி விக்ரமசிங்க தான் எதற்காக இதனை ஆரம்பித்தாரோ அதற்கான வெளியீட்டினை கண்டு பின்னாளில் மகிழ்ச்சியடைந்தார். அதாவது முன்னைய ஆண்டுகளில் மைக்ரோசொப்ட் இமாஜின் கிண்ணப் போட்டித் தொடரில் பங்குபற்றிய தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுடன் போட்டியிட்ட இன்போமெற்றிக்ஸ் நிறுவனம் ஒன்பது பதக்கங்களில் ஆறினைப் பெற்று வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது. IIT இன் பழைய மாணவர்கள் தற்போது இலங்கையின் முக்கியமான நிறுவனங்களில் முக்கியமான பதவிகளை வகிக்கின்றனர், அதில் பலர் இலங்கையின் ஏற்றுமதித் துறையில் பணியாற்றுகின்றனர். எனவே இவ் IIT இன் பழைய மாணவர்கள் இலங்கைக்காக அந்நியச் செலாவணியை ஈட்டுகின்றனர் என கலாநிதி விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிடுகின்றார். அத்துடன் IIT பிரிட்டிஸ் பட்டங்களை வழங்கியதில் தனது 25 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் அதனால் தாம் முன்னோடியாகத் திகழ்வதாகவும் கலாநிதி விக்ரமசிங்க அவர்கள் கூறுகின்றார்.
மேலும் அவர் கூறுகையில், இலங்கை அரசாங்கம் மற்றும் தனியார் துறைக்கு நடைமுறைப்படுத்திய திட்டங்களில், அத்திட்டங்களுக்கு முகங்கொடுக்கத் தேவையான பயிற்சிகளை ஊழியர்களுக்கு வழங்கியதாகவும் அத்துடன் ஊழியர்களின் வருவாய் ஒரு பாரிய பிரச்சினையாகக் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் தற்போது பல கம்பனிகள் IIT இலிருந்து வெளிவரும் பட்டதாரிகளுக்கும், இன்போமெற்றிக்ஸ் இன் முன்னாள் ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்புக்கள் வழங்குவதாகவும் கூறுகின்றார். தொழில் முனைவோர் தொழிலை துவங்குவதற்கும் அவர்களின் சொந்த நடவடிக்கைகளை நிறுவுவதற்கும் IIT முன்னாள் மாணவர்களால் ஊக்குவிக்கப்படுகின்றார்கள். தகவல் தொழினுட்பப் பட்டதாரிகளை நாட்டின் தேவைகளுக்கேற்ப விநியோகிப்பதில் தற்போதும் கூட பாரிய இடைவெளி இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார். சர்வதேச ரீதியில் எங்கெங்கு வாய்ப்புக்கள் கிடைக்கின்றதோ அதற்குப் பொருத்தமாக தேசிய பல்கலைக்கழகங்கள் மற்றும் மூன்றாம்நிலைக் கல்வி நிறுவனங்கள் ஆகியன பட்டதாரிகளை உருவாக்க வேண்டுமென அவர் கூறுகின்றார். இதன் மூலம் உருவாக்கப்படும் மனித வளங்கள் “சர்வதேச அளவிலான உற்பத்தி” களாகக் கருதப்படுவதால் அந்நிய செலாவணி வருவாய் மற்றும் ஏனைய பொருளாதார நன்மைகளுக்கூடாக இலங்கை மகத்தான நன்மையினை அடைய முடிகின்றது.
இலங்கையின் குறிப்பிட்ட முக்கிய பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கு இது மிகவும் பொருத்தமானது என கலாநிதி விக்ரமசிங்க தெரிவிக்கின்றார். இதன் மூலம் “கூட்டமாகப் போட்டியிட” வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறுகின்றார்.
கல்வியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்களும், தகுதிவாய்ந்த பட்டதாரிகளைக் கொண்ட தரம் வாய்ந்த ஒரு வளாகத்தை அமைப்பதற்கும், தரமான பட்டப்படிப்பு கல்வியை வழங்குவதற்கும் திட்டங்கள் உள்ளன. ஆரம்ப மட்டத்திலிருந்து கலாநிதிப் பட்டங்களை பெறுதல் வரையிலான கல்வி வழங்கப்படுகிறது. லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் பல்கலைக் கழகம், ஸ்காட்லாந்து நாட்டின் ராபர்ட் கோர்டன் பல்கலைக்கழகம் மற்றும் இங்கிலாந்தின் கேண்டர்பரி கிறிஸ்ட்சேர்ச் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் கல்வி பங்காளியாக இணைந்துள்ளது.
IIT ஆனது கணினி பட்டங்களை வழங்கியது மட்டுமன்றி வணிகம் தொடர்பான கணினி பட்டப்படிப்புகளையும் வழங்கியதாக கலாநிதி விக்ரமசிங்க அவர்கள் விளக்குகின்றார். அவர்கள் தெரிவு செய்த கற்கைப் பிரிவுகள் இலங்கை பொருளாதாரத்திற்கு முக்கியத்துவமானவையாக இருந்தது. அப்பிரிவுகள் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்பம், விவசாயம் மற்றும் கல்வி என்பனவாகும்.
முடிவாக, எதிர்வரும் 05 ஆண்டுகளில் இன்போமெற்றிக்ஸ் இனால் பெரியளவான மென்பொருள் வடிவமைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கலாநிதி விக்ரமசிங்க கூறுகின்றார். இன்போமெற்றிக்ஸ் இனால் இலங்கை குடிவரவு முறைமைக்கான மென்பொருளை முன்னதாகவே வடிவமைத்ததாகவும் பின்னர் அதனை பிஜி மற்றும் மொரிசியஸ் ஆகிய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தியதாகவும் அத்துடன் பல காப்புறுதி திட்டங்களை நடைமுறைப்படுத்தியதாகவும் கூறுகின்றார். இன்போமெற்றிக்ஸ் என்னென்ன செய்தது என கலாநிதி விக்ரமசிங்க விளக்குகையில், முதலில் உற்பத்திகள் சர்வதேச மயப்படுத்தப்படும் பின்னர் ஏனைய நாடுகளுக்கு எடுத்துச் செல்லப்படும். மேலும், அவை ஒரு முக்கிய சந்தை என்று வலியுறுத்துகின்றார். IIT போன்ற கம்பனிகள் மூன்றாம் நிலைக் கல்வியை வழங்குதல் மற்றும் மென்பொருள் உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் நாட்டினது பொருளாதார முன்னேற்றத்தில் பங்கெடுப்பதுடன் SLASSCOM (இலங்கை மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்கள் சங்கம்) இன் இலக்கான 05 வருடங்களில் மொத்த ஏற்றுமதி 05 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெற்றுக் கொள்வது எனவும் இவ் இலக்குகளை அடைவதற்கு IIT தனது சுயமான பங்களிப்புகளை வழங்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்பப் பிரிவு தொழில்துறையில் ஒரு முன்னோடியாகப் பாராட்டப்பட்டார், அத்துடன் 2014 ஆம் ஆண்டு இன்போரெல் இன் போது FITIS இனால் (இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனம்) ICT தொழில்துறையில் பல ஆண்டுகள் ஆற்றிய சேவைக்கான பாராட்டுக்குரிய அடையாளமாக அவருக்கு விருதளிக்கப்பட்டது.