பேராசிரியர் பி.டபிள்யூ.ஏபசிங்க அவர்கள் இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (ICTA) பதில் தலைவர் மற்றும் தலைவராகவும் இருந்ததுடன் 2017 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரை பேராதெனிய பல்கலைக்கழகத்தில் வேந்தராகப் பணியாற்றினார்.
பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் சிலோன் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இணைந்ததுடன் கணிதப்பிரிவில் முதலாம் தரத்தில் விசேட விஞ்ஞானமானிப் பட்டத்தினைப் பெற்றார். இவர் தனது பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய விசேட விஞ்ஞான புலமைப்பரிசிலைப் பெற்றதுடன் விசேட பட்டத்திற்கான இறுதிப்பரீட்சையில் விஞ்ஞான பீடம் சார்பாகவும் முதல் தகுதி பெற்றார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை லண்டன் இம்பீரியல் கல்லூரியில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்காக 1965 ஆம் ஆண்டு பெற்றார் மற்றும் அவரது ஆய்வின் தலைப்பு “நேர் கோட்டில் அல்லாத சொட்டாக்கப் புலங்களின் உருவாக்கம்” என்பதாகும். இவர் 1965 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பியதன் பின்னர் கணிதப்பிரிவில் விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்றார். இவர் 1967 ஆம் ஆண்டு பேராசிரியராக நியமிக்கப்பட்டதுடன் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார், பின்னர் சிலோன் பல்கலைக்கழகத்தில் வித்தியோதயா வளாகம் என அழைக்கப்பட்டதுடன் 1977/78 காலப்பகுதியில் அங்கு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் இருந்தார்.
இவர் 1978 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார் அத்துடன் கணிதத்துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றினார், அங்கு அவர் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறிக்காக “தீர்மானம் எடுத்தலில் அளவு சார்ந்த நுட்பங்கள்” எனும் பாடப்பிரிவினை வடிவமைத்து வழங்கினார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு பீடாதிபதியாக 1983, 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்டதுடன், பல தடவைகள் பதில் உப வேந்தராகவும் இருந்துள்ளார்.
பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் 1994 ஆண்டு மூன்றாம் நிலை மற்றும் தொழில்துறைக் கல்வி ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். மேலும் இவர் தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவராக 1997 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவர் பேராசிரியர் வி.கே.சமரநாயக்க அவர்கள் ICTA வின் தலைவராக இருந்த காலத்தில் அதன் குழுவில் இணைந்தார். பேராசிரியர் வி.கே.சமரநாயக்க அவர்கள் 2007 ஆம் ஆண்டில் இறைபதம் அடைந்ததனால், பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் ICTA வினது பதில் தலைவராக நியமிக்கப்பட்டார். மூன்று வருடத்தின் பின்னர் ICTA வின் தலைவராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் இந்நாட்டினை அபிவிருத்தி செய்வதற்காக பல்கலைக்கழகத் துறையில் மற்றும் அரசாங்க நிறுவனங்களில் தனது பணிகளை முன்னெடுத்ததற்கான புகழ்மிக்க வரலாற்றினைக் கொண்டுள்ளார். ஆகவே ICTA வினது தலைவராக நியமிக்கப்படுவதற்கான தகுதியையும் அதற்கு மிகப் பொருத்தமானவராகவும் காணப்பட்டார். இவர் இந்தப் பதவியின் மூலம் ஒருங்கிணைந்த அபிவிருத்தித் திட்டம் மற்றும் ICTA வினது பிரதான திட்டமாகிய இ-இலங்கை அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றினை நடைமுறைப்படுத்துவதற்கு வழிகாட்டல்களை வழங்கினார். இவர் ICTA வினது தலைவர் பதவியிலிருந்து 2014 ஆம் ஆண்டு விலகினார்.
சுருக்கமான காணொளி
முழுமையான காணொளி
பேராசிரியர் பி.டபிள்யூ.ஏபசிங்க அவர்கள் ICTA வினது தலைவர் மற்றும் பதில் தலைவராக 2014 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார் அத்துடன் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் வேந்தராக 2017 பெப்ரவரி மாதம் வரை பணியாற்றினார்.
பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் சிலோன் பல்கலைக்கழகத்தில் மாணவனாக இணைந்ததுடன் கணிதப்பிரிவில் முதலாம் தரத்தில் விசேட விஞ்ஞானமானிப் பட்டத்தினைப் பெற்றார். இவர் தனது பரீட்சைப் பெறுபேறுகளுக்கமைய விசேட விஞ்ஞான புலமைப்பரிசிலைப் பெற்றதுடன் விசேட பட்டத்திற்கான இறுதிப்பரீட்சையில் விஞ்ஞான பீடம் சார்பாகவும் முதல் தகுதி பெற்றார். இவர் தனது கலாநிதிப் பட்டத்தினை லண்டன் இம்பீரியல் கல்லூரியில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் 1965 ஆம் ஆண்டு பெற்றார் மற்றும் அவரது ஆய்வின் தலைப்பு “நேர் கோட்டில் அல்லாத சொட்டாக்கப் புலங்களின் உருவாக்கம்” என்பதாகும். இவர் 1965 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பியதன் பின்னர் கணிதப்பிரிவில் விரிவுரையாளராக பதவியுயர்வு பெற்றார். இவர் 1967 ஆம் ஆண்டு பேராசிரியராக நியமிக்கப்பட்டதுடன் ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கணிதத்துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார், பின்னர் சிலோன் பல்கலைக்கழகத்தில் வித்தியோதயா வளாகம் என அழைக்கப்பட்டதுடன் 1977/78 காலப்பகுதியில் அங்கு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதியாகவும் இருந்தார்.
இவர் 1978 ஆம் ஆண்டு கொழும்பு பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார் அத்துடன் கணிதத்துறையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். அதே நேரத்தில், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தில் வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றினார், அங்கு அவர் பட்டப்பின் டிப்ளோமா கற்கை நெறிக்காக “தீர்மானம் எடுத்தலில் அளவு சார்ந்த நுட்பங்கள்” எனும் பாடப்பிரிவினை வடிவமைத்து வழங்கினார். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்திற்கு பீடாதிபதியாக 1983, 1994 மற்றும் 1995 ஆம் ஆண்டுகளில் நியமிக்கப்பட்டதுடன், பல தடவைகள் பதில் உப வேந்தராகவும் இருந்துள்ளார்.
பேராசிரியர். ஏபசிங்கெ 1994 ஆம் ஆண்டு மூன்றாம் நிலைக் கல்வி தொழிற் கல்வி ஆணைகுழுவின் தலைவராக நியமிக்கப்பட்டதுடன் 1997 ஆம் ஆண்டு பேராசிரியர் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகாமையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
பேராசிரியர் வி.கே.சமரநாயக்க அவர்கள் ICTA வின் தலைவராக இருந்த போது 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் திகதி அதன் குழுவில் இணைந்தார். இப் புதிய குழுவினது பதவிக்கால ஆரம்பத்தில் ஒரு தலைமைத்துவக் குழுவானது தகவல் உட்கட்டமைப்பு, மீள்கட்டியெழுப்பப்பட்ட அரசாங்கம் மற்றும் இ-சட்டம் ஆகிய மூன்று பிரதான பகுதிகளையும் பிரதிநிதித்துவப்படுத்திய திரு.ரேஸான் தேவபுர, திரு. வசந்த தேசப்பிரிய மற்றும் திரு.ஜெயந்த பெர்னான்டோ ஆகியோரையும் உள்ளடக்கியிருந்தது. அக் குழுவானது திரு.தேவபுர அவர்களை முதலில் தலைமை செயல்பாட்டு அதிகாரியாக நியமித்ததுடன் பின்னர் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தது. அவர் தலைமைத்துவ குழு மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் குழுவினதும் அங்கத்தவராக தொடர்ந்ததால் அது நடுநிலைப்படுத்தப்டாமலிருந்தது அத்துடன் தலைமைத்துவ குழுவானது ICTA குழுவினது தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாகவிருந்தது. பேராசிரியர் வி.கே.சமரநாயக்க அவர்கள் 2007 ஆம் ஆண்டில் இறைபதம் அடைந்ததனால், பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் ICTA வினது பதில் தலைவராக நியமிக்கப்பட்டார். பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் தான் நீண்ட காலமாக பதில் தலைவராக இருப்பதாகக் கூறினார். மூன்று வருடங்களுக்குப் பின்னர் ICTA குழுவினால் ICTA வின் தலைவராக இவரை நியமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டார்.
பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் ICTA வின் தலைவராக மற்றும் துணைத் தலைவராக பதவி வகித்த காலத்தில் பல இலக்குகளை அடைந்தார் அவற்றில் சில கீழே தரப்பட்டுள்ளன;
– 1000 வது நெனசல நிலையம் 2014 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. நெனசல நிலையங்களினூடாக நாட்டிலுள்ள அனைவருக்கும் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான உட்கட்டமைப்புக்கள் பாரபட்சமின்றி கிடைக்க வழியமைக்கப்பட்டது. தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்பத்தின் சேவைகளை வேறுபட்ட வழிகளில் வழங்குவதற்கும், இவ்வாறான சேவைகள் கிடைப்பதில் கஷ்டத்தினை எதிர்நோக்கிய சமூகத்தினை இனங்கண்டு அங்கு ICT யின் நன்மைகளை கிடைக்கச் செய்வதனையும் இவ்வாறான சேவை மையங்கள் வழங்கின.
– அரச சேவைகளை மேலும் துரிதப்படுத்துவதற்கும் பயனுள்ள விதத்தில் வழங்குவதற்கும், வளங்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவது தவிர்ப்பதற்காகவும் மற்றும் அரசாங்க நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்காகவும் ICTA வினால் “லங்கா கவன்மென்ட் நெட்வேக்” எனும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. மேலும் இணைய வசதிகள், VoIP வசதிகள் மற்றும் மின்னஞ்சல் வசதிகள் ஆகியன அரசாங்க நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது.
– இதன் பொருட்டு இலங்கையின் செயற்திறனுக்காக ஐக்கிய நாடுகள் சபையின் 192 நாடுகளை உள்ளடக்கிய இ-அரச சுட்டெண் தரப்படுத்தலில் 41 இடங்கள் முன்னேறியது. அதாவது இலங்கையானது 2012 இல் 115 வது இடத்தினைப் பெற்றிருந்ததுடன் 2014 ஆம் ஆண்டில் 74 வது இடத்தினைப் பெற்றது. இது தரப்படுத்தலில் 38.5% அதிகரிப்பாகும் அத்துடன் இ-அரசாங்க நிகழ்ச்சித்திட்டத்தினை நடைமுறைப்படுத்திய உலகின் முதல் 40% நாடுகளில் ஒன்றாக இலங்கையானது காணப்பட்டது.
– ICTA அதன் பங்குதாரர்களான கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரி, மொறட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் தகவல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தும் போது தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான யுனிகோட் முறைமையை பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தன; யுனிகோட் முறைமையிற்கு இணங்கக்கூடியவாறு உள்நாட்டு மொழிகளுக்கான எழுத்துருக்கள் மற்றும் தட்டச்சு இயக்குநிரல்கள் என்பன நடைமுறைப் படுத்தப்பட்டன. .LK யிலுள்ள தமிழ் மற்றும் சிங்கள மொழி சொற்களுக்கு நிகராக இலங்கைக்கான IDN உயர் மட்ட டொமைன் பெயர்கள் (ccTLDs) பல ஆலோசனைகளுக்கூடாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவை ICANN யினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தற்போது அவை இணைய மூல மண்டலத்தில் (இன்ரநெட் ரூட் சோன்) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ் உள்ளூர்மயமாக்கம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதுடன் இலங்கையில் கணினிப் பயன்பாடானது உள்நாட்டு மொழித் தேவைகளை ஏற்றுக் கொள்ளக்கூடியவாறு காணப்பட்டது.
– கிராமப்புறச் சமூகங்களில் உள்நாட்டு மொழியிலான உள்ளடக்கங்களை கட்டியெழுப்புவதற்கும் அதற்குப் பொருத்தமான சேவைகளை வழங்குவதன் மூலம் நெனசல நிலையங்கள் பேண்தகைமையில் பங்காற்றுவற்கும் அதிக முயற்சி தேவைப்பட்டது. உள்நாட்டு மொழிகளில் இச்சேவைகள் தொடர்பாக ஒரு தொகுப்பு வடிவமைக்கப்பட்டதுடன் அது அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாகவும் செய்யப்பட்டது.
பல ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இ-ஸ்வாபிமானி நிகழ்வின்போது தேசிய சிறந்த உள்ளடக்கத்திற்கான விருதுகள் கிடைத்தது. இ-ஸ்வமானி ஆனது சிறந்த டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்கத்தினை இனங்காண்பதற்காக ICTA னால் முன்னெடுக்கப்படும் ஒரு நிகழ்வு.ICTA ஆனது WSA மொபைல் கிராண்ட் ஜூரி யில் உறுப்புரிமை வகிப்பதனால் அதில் விருது பெறுவதற்கான பரிந்துரைகளை ஆராயும் செயற்பாடுகளில் ஈடுபட்டது.
இவ்வாறு பேராசிரியர் ஏபசிங்க அவர்கள் தனது தொழில் வாழ்க்கையில் அதிகமான நேரத்தினை பல்கலைக்கழக முறைமையிலும் அரசாங்க நிறுவனங்களிலும் சேவையாற்றுவதற்கு அர்ப்பணித்தார். இவர் 2014 ஆம் ஆண்டு ICTA விலிருந்து பதவி விலகினார்.