கலாநிதி ருவான் வீரசிங்க

கலாநிதி ருவான் வீரசிங்க அவர்கள் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியலில் தனது முதல் பட்டத்தினை இலங்கை, கொழும்பு பல்கலைக்கழகத்தில் பெற்றுக்கொண்டார். இவர் இங்கிலாந்தில் தனது பட்டப்பின் படிப்பினை தொடர்ந்தபோது தகவல் தொழினுட்பம் மற்றும் கணினி விஞ்ஞான துறையினுள் ஆர்வம் காட்டினார். அதன் பின்னர் பல்வேறு வகையான தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப தொழிற்துறை அம்சங்களில் தனது ஈடுபாட்டினைக் காட்டினார்.

இவர் அரசதுறை நிறுவனங்களுக்காக சிறிய அளவிலான செயற்திட்டங்கள் மற்றும் செயலாக்க ஆய்வுகளை ஆரம்பித்தார்.
இலங்கைக்கு இணையத்தினை அறிமுகப்படுத்துவதில் உந்துசக்தியாகச் செயற்பட்டு முன்னோடியாக இருந்தவர்களில் கலாநிதி ருவன் வீரசிங்கவும் பங்குவகிக்கின்றார்; லங்கா கல்வி மற்றும் ஆராய்ச்சி நெட்வொர்க் (LEARN) மற்றும் 2003 ஆம் ஆண்டுவரை இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்பப் பிரிவில் உயர்மட்டத் தீர்மானங்களை மேற்கொண்ட நிறுவனமான தகவல் தொழினுட்பப் பேரவையின் இணையக் குழு ஆகிய இரண்டிலும் இவரது வகிபாகம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கலாநிதி ருவான் வீரசிங்க 1996 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இன்ரநெட் சொசைற்றிக்காக வளர்ந்து வரும் நாடுகளில் வலையமைப்பு பணியாளர்களைப் பயிற்றுவிக்கும் ஒரு போதனாசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும், இவர் இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப நிறுவனத்தினால் (ICTA) முன்னெடுக்கப்பட்ட இ-சிறீலங்கா அபிவிருத்தித் திட்டத்தில் சிறந்த ஈடுபாட்டினைக் கொண்டிருந்தார். இவர் ICTA வின் உள்நாட்டு மொழிகள் பணிக்குழுவினது ஒரு செயல்மிக்க உறுப்பினராவார்.

இவர் ஒரு கல்வியியலாளராக பல்வேறு பின்புலங்களைக் கொண்ட மாணவர்களுக்கு தகவல் தொழினுட்பம் மற்றும் கணினி விஞ்ஞானத்திலுள்ள அனைத்து அம்சங்களையும் கற்பித்துள்ளார். இவர் கணினிகளில் மனித மொழி செயலாக்கம் தொடர்பான பல்வேறுபட்ட அம்சங்களில் ஆய்வு செய்வதில் ஆர்வமுள்ளவர், அதிலும் குறிப்பாக புள்ளிவிவர மற்றும் கார்பஸ் அடிப்படையிலான (Corpus-based) அணுகுமுறைகள் மற்றும் கணினி மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டவர்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


கலாநிதி ருவான் வீரசிங்க அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினியியல் கல்லூரியில் (UCSC) ஒரு சிரேஸ்ர விரிவுரையாளராக பணியாற்றுகின்றார். இவர் இலங்கை, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் புள்ளிவிபரவியலில் தனது முதல் பட்டத்தினைப் பெற்றார். இவர் இங்கிலாந்தில் தனது பட்டப்பின் படிப்பினை தொடர்ந்தபோது தகவல் தொழினுட்பம் மற்றும் கணினி விஞ்ஞான துறையினுள் ஆர்வம் காட்டினார். அதன் பின்னர் பல்வேறு வகையான தகவல் தொடர்பாடல் மற்றும் தொழினுட்ப தொழிற்துறை அம்சங்களில் தனது ஈடுபாட்டினைக் காட்டினார். அவரது தந்தையின் நண்பர் ஒரு சிங்ளேயர் கணினியை அனுப்பியபோது கணினிகளில் முதலில் ஆர்வம் உண்டானதாக கலாநிதி ருவான் வீரசிங்க கூறுகின்றார். இவர் பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் போது பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்களினால் போர்றான் (FORTRAN) கணினி மொழி கற்பிக்கப்பட்டாக நினைவு கூர்கின்றார், அங்கு மாணவர்கள் பேப்பரில் அதனைக் கற்றதாகவும் குறிப்பிடுகின்றார். இவர் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் போது பல்கலைக்கழகத்தினால் ஒரு டேற்றாமினி மினிகொம்பியூட்டர் பெறப்பட்டதாகவும் அதனை மாணவர்கள் பாவனைக்காக பயன்படுத்த பிற்பகல் 8.00 மணிக்குப் பின்னர் அனுமதி வழங்கியதாகவும் கலாநிதி ருவான் வீரசிங்க கூறுகின்றார். ஒரு இயந்திரத்தை பெறுவதில் உள்ள ஆர்வம் நாம் விரும்புவதைச் செய்வதற்காக அத்துடன் செய்ய வேண்டியது இன்று வரை உள்ளது என கலாநிதி ருவான் வீரசிங்க நினைவு படுத்துகின்றார்.

கலாநிதி ருவான் வீரசிங்க இறப்பர் ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றியதன் பின்னர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் மீண்டும் இணைந்து கொண்டார். அங்கு புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கணினி தொழினுட்ப நிறுவனத்தில் இணைந்தார், இது பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கணினியியல் கல்லூரி (UCSC) எனப் பெயர் மாற்றம் பெற்றது. அந்நேரத்தில் ICT யில் இணைத்துக் கொள்ளப்பட்ட மற்றய நபராக கலாநிதி அஜித் மதரபெரும அவர்கள் காணப்பட்டார். இவ் நிறுவனத்திற்கு பேராசிரியர் வி.கே.சமரனாயக்க அவர்கள் தலைமை தாங்கினார் அத்துடன் JICA (ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்) லிருந்து பெறப்பட்ட மானியத்தின் மூலம் அது உருவாக்கப்பட்டது. ICT இல் இருந்த ஜப்பானிய ஊழியர்கள் டம்ப் டெர்மினல்களுடனான மெயின்பிறேம் கணினிகளில் கவனம் செலுத்தினார்கள். கலாநிதி வீரசிங்க மற்றும் கலாநிதி மதுரப்பெரும ஆகியோர் இதற்கு எதிராகக் கேள்வி எழுப்பினர் மற்றும் தனிப்பட்ட கணினி பற்றிய ஒரு பாடநெறியை வடிவமைத்து அதனை பாடத்திட்டத்தில் சேர்த்தனர். இம்முயற்சியின் விளைவாக கலாநிதி வீரசிங்க கற்பித்தலில் ஈடுபாடு காட்ட ஆரம்பித்தார்.
பின்னர் 1989 ஆம் ஆண்டு, தனது முதுமானிப் பட்டப்படிப்பினை கணினியியல் பிரிவில் தொடர்வதற்காக கார்டிஃப் பல்கலைக்கழகத்தில் இணைந்தார் அத்துடன் அங்கு இயற்கை மொழி செயலாக்கப்பிரிவில் கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றார்.
அவர் 1994 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்திற்குத் திரும்பி வந்தபோது, அவர் எல்லாவற்றையும் மிகவும் வித்தியாசமாக உணர்ந்தார்- அதாவது தனி கணினிகள் கொண்ட ஆய்வகங்கள் இருந்தன மற்றும் ஒரு நோவெல் நெட்வேர் நெற்வேர்க்குடனான ஒரு ஆய்வகம் இருந்தது. கலாநிதி நளின் ரணசிங்க உடன் இணைந்து, சன் மைக்ரோ கம்பியூட்டர்களை கொண்ட ஒரு ஆய்வுகூடத்தினை நோவெல் நெட்வேர் உடன் TCP / IP இனைக் கொண்ட ஒரு ஆய்வுக்கூடத்துடன் இணைத்தார்,
இது வேறுபட்ட சிஸ்டங்களுக்கிடையே தொடர்பு கொள்ள அனுமதித்தது. இந்த நேரத்தில் பேராசிரியர் கிஹான் டயஸ், கலாநிதி நிமல் ரத்னாயக்க, கலாநிதி பிரபாத் சமரதுங்க, திரு.அதுல ஹேரத் மற்றும் பலர் சேர்ந்து SL நெட் இனை அமைத்தனர், பின்னர் அது LaCNet என மாற்றப்பட்டது, இது மின்னஞ்சலுக்கான ஒரு தொலைத்தொடர்பு வலையமைப்பாகும். கொழும்பு பல்கலைக்கழகம், மொறட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றினை இணைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையேயான முதலாவது வலையமைப்பினை பேராசிரியர் அபய இந்துருவ அவர்கள் உருவாக்கினார். இது LEARN – இலங்கை கல்வி, அகாடமிக் மற்றும் ஆராய்ச்சி வலையமைப்பு என அழைக்கப்பட்டது.

கணினி தொழினுட்ப நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைகளின் காரணமாக கற்பித்தல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக பல்வேறு பிரிவுகளில் ஈடுபாடு காட்டியதாக கலாநிதி வீரசிங்க அவர்கள் கூறுகின்றார். இவர் FITIS (இலங்கையின் தகவல் தொழினுட்ப தொழிற்துறை சம்மேளனம்) போன்ற தொழில்துறை அமைப்புகளில் ஈடுபாடு காட்டினார் அத்துடன் இலங்கை ICT நிறுவனத்தினால் (ICTA) நடைமுறைப்படுத்தப்பட்ட இ-சிறீலங்கா அபிவிருத்தித் திட்டத்தின் திட்டவரைவினை வரைந்த குழுவுடனும் இணைந்து செயற்பட்டுள்ளார். உலக வங்கியுடன் இலங்கைக்காக பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழுவின் உறுப்பினராக கலாநிதி வீரசிங்க இருந்தார். இந்த முயற்சியானது ஆரம்பத்தில் தனியார் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டதாக இவர் கூறுகின்றார், அத்துடன் திட்டவரைபில் இரு பெரிய திருத்தமுடியாத இடைவெளிகள் காணப்படுவதனையும் உறுதிப்படுத்தினார்; அதில் ஒன்று ஓபின்சோஸிற்கான எந்தவொரு மூலக் குறிப்பும் உள்ளடக்கப்படவில்லை என்பதாகும் அத்துடன் இரண்டாவதாக, மொழி பற்றிய எந்தவொரு விடயமும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. பின்னர் திட்டவரைபில் இவை பற்றிய பகுதிகள் உள்ளடக்கப்பட்டிருப்பதனை கலாநிதி வீரசிங்க அவர்கள் உறுதிப்படுத்தியிருந்தார். சிங்களம் மற்றும் தமிழின் பயன்பாட்டை இந்த ஆவணம் குறிப்பிட வேண்டும் என்ற உண்மையை அவர் வலியுறுத்துகிறார், இது இ-அரசு கொள்கையிலும் உள்ளடக்கப்பட்டது. இந்தக் கொள்கை பல ஆண்டுகளுக்குப் பின்னர் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டது. ICTA யின் முன்முயற்சியாக இருந்த பிந்தைய ஆவணம் அனைத்து அரசாங்க வலைத்தளங்களும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இருக்க வேண்டும் எனக் கூறுகிறது.

கலாநிதி வீரசிங்க ICTA வின் கீழ் இரு நிதிகளை நிறுவுவதற்கான சபைகளின் உறுப்பினராக இருந்தார்; அதில் ஒரு நிதி தனியார் துறையினை அபிவிருத்தி செய்வதற்காகவும் மற்றயது புல்-வேர்கள் (grass-roots) சமூகத்தினை அபிவிருத்தி செய்வதற்காகவும் பயன்பட்டது.
இ-சிறீலங்கா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து கற்றுக் கொள்ளப்பட்ட ஒரு முக்கிய பாடம் மிகப் பெரிய அபிவிருத்தி திட்டங்களை திட்டமிடுவதற்கான வழிவகை என கலாநிதி வீரசிங்க குறிப்பிடுகிறார்; எல்லாவற்றையும் மீறி, இ-சிறீலங்கா அபிவிருத்தி வேலைத்திட்டம் நன்கு திட்டமிடப்பட்ட, நன்கு சிந்திக்கப்பட்ட, நன்கு செயற்படுத்தப்பட்ட வேலைத்திட்டமாக இருந்ததுடன் எந்தவொரு வகையிலும் வீணாக இருப்பதாக யாரும் விமர்சிக்க முடியாது என்று அவர் கூறுகிறார்.

அவர் SLASSCOM (மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களிற்கான இலங்கை சங்கம்) உடன் தொடர்புபட்டுள்ளதாகவும் மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின்(SLSI) IT பிரிவு குழுவினது ஒரு உறுப்பினராக இருப்பதாகவும் கூறுகின்றார். இவ் ஈடுபாடுகள் தனக்கு தொழில்துறையில் பரந்த பாராட்டுக்களை பெற்றுத் தந்திருப்பதாக அவர் கூறுகின்றார்.

கலாநிதி வீரசிங்க ஈடுபாடு காட்டிய மற்றய பிரிவாக மொழிபெயர்ப்பு காணப்படுகின்றது. IT இல் உள்ள ஆர்வமும் மற்றவர்களிற்கு அறிவுரைகளை வழங்குவதில் இருந்த ஆர்வமும் இலங்கையிலுள்ள பலர் கணினியைப் பயன்படுத்தத் தயக்கம் காட்டியதனை உணர்த்தியது, ஏனென்றால் கணினியைப் பயன்படுத்துவதற்கு ஆங்கிலத்தினை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று அவர்கள் நினைத்தார்கள். இதற்கு முன்னர், ஒரு கணினியைப் பயன்படுத்தக்கூடிய ஒரே மொழி ஆங்கிலமாக இருந்தது. ஆகவே பேராசிரியர் சமரனாயக்க அவர்களால் தகவல் தொழினுட்பப் பேரவையில் (CINTEC) ஒரு சிறிய குழுவின் மூலம் ஆரம்பிக்கப்பட்ட மொழிபெயர்ப்பு தொடர்பான பணிகளில் கலாநிதி வீரசிங்கவிற்கு ஆர்வம் உண்டானது. சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கணினியைப் பயன்படுத்துவதற்கான அடிப்படை உள்கட்டமைப்பை ஏற்படுத்த இந்தக் குழு முயற்சித்தது. இதற்காக தமிழ்மொழியினைப் பயன்படுத்துவதில் உள்ள பிரச்சினைகளை இந்தியா எடுத்துரைத்தது, ஆனால் சிங்கள மொழியில் கணினியைப் பயன்படுத்தக்கூடிய சூழ்நிலைகளை ஏற்படுத்துவது அக் குழுவினது முழுமையான முயற்சியாகக் காணப்பட்டது. CINTEC முடப்பட்டதுடன் ICTA ஸ்தாபிக்கப்பட்டது பின்னர் 2003 ஆம் ஆண்டு ஜீலை மாதம் அதன் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன, அத்துடன் மொழிபெயர்ப்புப் பணிகள் ICTA யினது உள்நாட்டு மொழிகள் பணிக்குழுவினால் (LLWG) முன்னெடுக்கப்பட்டது மேலும் அக்குழு தற்போதும் இயங்குவதாக கலாநிதி வீரசிங்க கூறுகின்றார். LLWG ஆனது SLSI, யுனிகோர்ட் கூட்டமைப்பு மற்றும் மைக்ரோசொப்ற், கூகிள் மற்றும் ஒராக்கிள் போன்ற பெரிய விநியோகஸ்தர்களுடனும் பணியாற்றியுள்ளது. பேராசிரியர் கிஹான் டயஸ் தனது ஓய்வினை விடுப்புக் காலப்பகுதியில் ICTA இல் இணைந்தது இந்த முயற்சியை முன்னெடுப்பதற்குப் பெரிதும் உதவியது என அவர் குறிப்பிடுகிறார். மேலும் கணினிகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளைச் செயற்படுத்துவதற்கு யுனிகோட் இணக்கமான எழுத்துருக்கள், உள்நாட்டு மொழி விசைப்பலகைகள், ஒரு நிலையான தொகுப்பு வரிசை, ICT சிங்கள சொற்களஞ்சியம் உருவாக்குதல் போன்ற பல அடிப்படைத் தேவைகள் காணப்படுவதாக அவர் கூறுகின்றார். இவை அனைத்தும் திருப்திகரமாக எடுத்துரைக்கப்பட்டது அத்துடன் தற்போது ஆப்டிகல் கேரக்டர் இனங்காணல் மற்றும் சிங்களம், தமிழ் மொழிகளில் உரையிலிருந்து பேச்சு போன்ற ஏனைய பிரச்சினைகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது சிங்களம் மற்றும் தமிழ் மற்றும் நூற்றுக்கணக்கான உள்ளூர் மொழி வலைத்தளங்கள் மற்றும் வெளிவந்துள்ள வலைப்பதிவுகள் ஆகியவற்றினைப் பயன்படுத்தும்   ஆயிரக்கணக்கான மக்களால் வெளிப்படுத்தப்படுகின்றது. இந்த முயற்சியை பின்பற்றி இரண்டு சமூக குழுக்கள் உருவாகின அவை சிங்கள யூனிகோட் குழு மற்றும், “சிங்கள வலைப்பதிவு Sansadaya” ஆகியனவாகும்.

இதன் பெறுபேற்றின் நன்மைகளை நாம் இன்று அனுபவிக்கின்றோம், இது அனைத்து பங்குதாரர்கள் மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனம் உட்பட்ட பங்காளிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

UCSC யின் மொழி தொழில்நுட்ப வள ஆய்வகத்தின் நோக்கம் கணினிகளை உள்ளூர் மொழிகளில் பயன்படுத்துதல் ஆகும் அதனால் இது வெளிப்படையானதாக இருப்பதால் பயனர்கள் தொழில்நுட்பத்தைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமில்லை.

முடிவாக, கலாநிதி வீரசிங்க அவர்கள் கற்பிப்பதில் இன்னும் ஆர்வமுள்ளதாகவும் அத்துடன் அது இளைய தலைமுறையினரை ஆளுமைமைப்படுத்துவதற்கு அவசியமெனவும் கூறுகின்றார். இலக்குகளை அடைய மற்றும் இலக்குகளைப் பெறுபவர்கள் கொழும்பிலிருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நாட்டின் மற்றய பகுதிகளிலும் இருக்க முடியும் அத்துடன் இலங்கையின் கலாச்சாரத்தினை கற்பிக்க முடியும், மற்றும் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கும் வழியைக் கருத்தில் கொண்டு, மற்றவர்கள் உருவாக்கிய தொழினுட்பத்தை இலங்கை அவசியமாக பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் இலங்கைக்கு பொருத்தமான தொழினுட்பங்களை கண்டுபிடிக்க முடியும். இளைஞர்களை பின்தொடர வேண்டியதில்லை, ஆனால் வழிநடத்த ஈர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார். கலாநிதி வீரசிங்க கற்பித்தல் பணியை தொடர விரும்புவதாகவும் அத்துடன் தாம் தீங்கில் இருப்பதாக நினைக்கும் இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் கூறுகின்றார். “தொழினுட்பம் வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் வழிமுறையை உருவாக்குவது மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தும் முறை மற்றும் மாற்றியமைக்கும் வழிமுறைகள் என்பவை தொடர்பாக அவர்களை சிந்திக்க வைப்பது எவ்வாறு” என்பது கலாநிதி ருவான் வீரசிங்க அவர்களின் வினாவாக உள்ளது.

Gallery