தினீசா எதிரிவீர அம்மணியார்

தினீசா எதிரிவீர அம்மணியார் அவர்கள் தற்போது அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஓஃப் சிலோன் லிமிடெட் (ANCL) இல் ஒரு சிரேஸ்ர சிஸ்டம் என்ஜினியராக இருக்கின்றார். இவர் இலங்கை, மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் பிரிவில் B.Sc. மற்றும் M.Sc பட்டங்களைப் பெற்றுள்ளார். மேலும், இவர் இலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் (IESL) ஒரு கூட்டு உறுப்பினராக இருக்கின்றார் அத்துடன் இலங்கை கம்பியூட்டர் சொசைற்றியின் (CSSL) ஒரு கூட்டு உறுப்பினராகவும் இருக்கின்றார்.

எதிரிவீர அம்மணியார் ANCL இல் பணியாற்றும் போது, ANCL இற்காக வகைப்படுத்தப்பட்ட விளம்பர முறைமை மற்றும் டிஜிட்டல் விளம்பர முறைமைக்கான மென்பொருள்களை வடிவமைத்து உருவாக்கினார். இவர் மேலும் வகைப்படுத்தப்பட்ட விளம்பர முறைமைக்காக சிங்கள அடுக்கு அல்கோரிதம் மற்றும் ஆசிரியர் அமைப்பிற்காக சிங்கள ஹைபெனேசன் முறைமையையும் மற்றும் யுனிகோட் அல்லாததிலிருந்து யுனிகோட்டிற்கு மாற்றுவதற்கான மென்பொருள் மற்றும் உரிமையுடைய திறந்த முறைமைகளையும் வடிவமைத்து உருவாக்கினார். இவர் மேலும் ANCL யுனிகோட் எழுத்துரு தினமின யினை திரு.அனுர திசேரவின் வழிகாட்டலின் கீழ் உருவாக்கினார். இந்த எழுத்துரு பின்னர் இலவசமாகப் பயன்படுத்த ICTA விடம் கையளிக்கப்பட்டது.

தினீசா எதிரிவீர அம்மணியார் இலங்கை ICT நிறுவனத்தின் (ICTA) உள்நாட்டு மொழிகள் பணிக்குழுவில் (LLWG) ஒரு செயற்படு உறுப்பினராக கடந்த எட்டு ஆண்டுகளாக பணியாற்றுகின்றார். ICTA யுனிகோட் இணக்கமான சிங்கள எழுத்துரு “பாஷித” ற்கான விதிகளை எடிரிவீர அம்மையார் உருவாக்கினார் அத்துடன் திரு. பேமசிறீ வடிவமைத்த கிளிஃப்ஸுடன் அதை பூர்த்திசெய்தார். எடிரிவீர அம்மணியார் பரிந்துரைத்ததற்கமைய எழுத்துருவிற்கு “பாஷித” எனப் பெயரிடப்பட்டது. கலையுணர்வுடனான சரியான சிங்கள எழுத்துருவாகிய “பாஷித” மூன்று நிலைகளில் உருவாக்கப்பட்டது மற்றும் ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஒவ்வொரு எழுத்துருவும் செரிப் மற்றும் சான்ஸ் செரிப் எழுத்துருக்களுடனான ஒரு எழுத்துரு குடும்பத்தினைக் கொண்டிருந்தது. மொஸிலா பயர்பொக்ஸ் இந்த எழுத்துருவை வழங்குமாறு கோரியது மற்றும் இதற்காக ஒரு இலகுவான பதிப்பு “பாஷிதஸ்கிறீன்” மொஸிலா பயர்பொக்ஸிற்கு வெளியிடப்பட்டது. எடிரிவீர அம்மணியார் இவ் எழுத்துரு விதிகளை “ஹோடிபோதா” எழுத்துருவில் பயன்படுத்தினார், இது ICTA ற்காக உருவாக்கப்பட்டது அத்துடன் அது சிறு குழந்தைகளைக் கற்பிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டது.

சிங்கள மொழியானது சொல் உருவாக்கம் மற்றும் இலக்கண வடிவத்தில் ஒரு சிறந்த கட்டமைப்பினைக் கொண்டிருப்பதாக தினீசா எடிரிவீர அம்மணியார் கூறுகின்றார். அத்துடன் மொழிபெயர்ப்பு மென்பொருளுக்கு கிடைக்கக்கூடியபடி இக் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய அவர் விரும்புகிறார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி

 

தினீசா எதிரிவீர அம்மணியார் தற்போது அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஓஃப் சிலோன் லிமிடெட் (ANCL) இல் ஒரு சிரேஸ்ர சிஸ்டம் என்ஜினியராக இருக்கின்றார். தினீசா அம்மணியார் மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறைக்கு 1980 ஆம் ஆண்டின் இடைப்பகுதியில் தெரிவு செய்யப்பட்டார். அவர் பல்கலைக்கழகத்தில் நுழைந்த நேரத்தில் ஒரு கணினியைக் கூட பார்க்கவில்லை, ஆனால் ICT அரங்கில் எவ்வாறு நுழைந்தார் என எடிரிவீரா அம்மணியார் கூறுகிறார். பல்கலைக்கழகத்தில், அவர் “பல நிலை நினைவக உருவகப்படுத்துதல்” எனும் ஒரு குழுச் செயற்திட்டத்தினை முன்னெடுக்க வேண்டியிருந்தது, அதில் அவர் வடிவமைப்பு மற்றும் கணினி நிரலாக்கத்தில் ஈடுபட்டிருந்தார். அதனை C கணினி மொழியில் எழுதினார் அத்துடன் இந்த திட்டம் மென்பொருள் பொறியியலில் அவருக்கு நம்பிக்கையை அளித்தது.

தினீசா எதிரிவீர அம்மணியார் பட்டம் பெற்ற நேரத்தில் நாட்டினுள் பலமான மென்பொருள் தொழில்துறை எதுவும் காணப்படவில்லை. இவர் “லேக்கவுஸ்” என அழைக்கப்பட்ட அசோசியேட்டட் நியூஸ்பேப்பர்ஸ் ஓஃப் சிலோன் லிமிடெட் (ANCL) இல் ஒரு மின்னணு பொறியியலாளராக இணைந்தார். ANCL சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பத்திரிகைகளை வெளியிட்டது, இதற்காக ஒரு வகை டைப்செட்டிங் நெட்வேர்க் அங்கு காணப்பட்டது. அந்த நேரத்தில் பராமரிப்பு மற்றும் சரிசெய்தல் ஆகியன முக்கிய பணிகளாக இருந்தது. பின்னர், திறந்த சிஸ்டங்களின் மீது கவனம் செலுத்தவேண்டியேற்பட்டது மற்றும் அப்போது கணினிகளை மாற்றுவதற்கான நேரம் வந்தது. புதிய இயந்திரங்கள் திறந்த சிஸ்டங்களுக்கு (ஓப்பிண் சிஸ்டம்) இணக்கமாக இருக்க வேண்டியிருந்தது. உற்பத்தித்தளமானது ஒரு சமாந்தரமான இயக்கத்துடன் மாற்றீடு செய்யப்பட வேண்டியிருந்தது. எனவே, மாற்றம் படிப்படியாக நடந்தது. இவ் மாற்றம் நடைபெற்ற காலத்தில், எதிரிவீர அம்மணியார் தனியுரிமைமிக்க சிஸ்டங்களிலிருந்து திறந்த சிஸ்டங்களுக்கு மாற்றுவதற்கான நிரலாக்கப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். ANCL ஆனது பின்தளத்தை (backend) மாற்றியதோடு மட்டுமல்லாது முன்தளத்தினையும் (frontend) மாற்றியது, அதாவது டைப்செற்றிங் முறைமையில் மாற்றமேற்பட்டது. ANCL அந்த நேரத்தில் ஒரு சிங்கள விசைப்பலகையை இயக்கி பல சிங்கள எழுத்துருக்களை பெற்றுக் கொண்டது, அவை அனைத்தும் தனியுரிமை மென்பொருளாகக் காணப்பட்டது. மாற்றங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், அடுத்த செயற்பாடாக தனியுரிமைமிக்க வகைப்படுத்தப்பட்ட விளம்பர முறைமை மாற்றீடு செய்யப்பட வேண்டியிருந்தது அத்துடன் மாற்றீடு செய்வதற்கான ஒரு மென்பொருளை உருவாக்குவது எதிரிவீர அம்மணியாரின் பணியாக இருந்தது.

இந்த முறைமை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழியிலான வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை கையாளக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த விளம்பரங்கள் முதலில் வகைக்குறித்தல் குறியீட்டின்படி வரிசைப்படுத்தப்பட்டன. அதன்பின்னர், வகைக்குறித்தல் குறியீட்டிற்குள் அடுக்குவரிசை தொடரின்படி வரிசைப்படுத்தப்பட்டன. ஆங்கிலத்திலிருந்த விளம்பரங்களை வரிசைப்படுத்துவதில் எந்தவித பிரச்சினையும் காணப்படவில்லை. ஆனால் சிங்கள வகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களை வரிசைப்படுத்துவது இலகுவானதாக இருக்கவில்லை. ANCL பயன்படுத்திய அடுக்குவரிசை தொடரானது சிங்கள அடுக்குவரிசை தொடரினை ஒத்திருந்தது, பின்னர் அது தகவல் பரிமாற்றத்திற்கான இலங்கை சிங்கள எழுத்து குறியீடு பகுதி 1 ஆக, SLS 1134: 2004 இலங்கை தரநிர்ணய நிறுவனத்தால் தரப்படுத்தப்பட்டது.

யுனிகோட்டிற்கு இணக்கமான எழுத்துரு “தினமின” ஆனது ANCL யினால் உருவாக்கப்பட்டது அத்துடன் அது இலவசமாகப் பயன்படுத்துவதற்காக ICTA விடம் கையளிக்கப்பட்டது. இந்த எழுத்துரு சிங்கள மொழியிலான ICT யின் பயன்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தியது. ANCL இல் தனது சிரேஸ்ர அலுவலராக இருந்த திரு.அநுர திஸ்ஸெரா தனக்கு வாய்ப்புகளையும் வழிகாட்டல்களையும் வழங்கியதாக எடிரிவீரா அம்மணியார் கூறுகிறார்.

திரு. திஸ்ஸெரா அவர்கள் இலங்கை ICT நிறுவனத்தின் (ICTA) உள்நாட்டு மொழிகள் பணிக்குழுவின் (LLWG) ஒரு உறுப்பினராக இருந்தார் அத்துடன் ICTA யின் முன்னோடி நிறுவனமான தகவல் தொழினுட்பப் பேரவையின் (CINTEC) எழுத்துரு குழுவின் ஒரு உறுப்பினராகவும் முன்னர் இருந்துள்ளார். இந்தக் குழு சிங்கள ICT தரம் SLS 1134: 2004 மற்றும் SLS 1134: 2011 ஆகியவற்றினை உருவாக்குவதில் பணியாற்றியது. இரண்டாவது தரநிலையானது சிங்கள எண்களுக்கு குறியாக்கத்தை கொண்டிருந்தது. LLWG ஆனது தகவல் பரிமாற்றத்திற்கான இலங்கை தமிழ் எழுத்துக் குறியீடு, SLS 1326: 2008 யினை உருவாக்கியது.

யுனிகோட் இணக்கமான சிங்கள எழுத்துருக்களை உருவாக்குவதில் LLWG பணியாற்றியது, இது சிங்களத்தில் ICT யினைப் பயன்படுத்துவதில் முழுமையான புரட்சியை ஏற்படுத்தியது. இந்த உருவாக்கம் சிங்கள மொழியில் தேடுவதற்கு மற்றும் வரிசைப்படுத்துவதற்கு இலகுவாக்கியது அத்துடன் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்ட அதே வழியில் சிங்களமும் பயன்படுத்தப்பட்டது. சிங்கள யுனிகோட் எழுத்துரு “போதா” மைக்ரோசொப்ற்றினால் 2000 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது, இது மைக்ரோசொப்ற்றின் பிரபல்யமான எழுத்துருவான “இஸ்குலா போதா” வின் முன்னைய பதிப்பாக இருந்தது.

எழுத்துரு “போதா” வினைப் பயன்படுத்தி, சிங்கள கூட்டெழுத்துக்களை தட்டச்சு செய்யமுடிந்தது ஆனால் அது எல்லா கூட்டெழுத்துக்களுக்கும் ஒருங்கிசையவில்லை. எனவே, சிங்களத்தில் காணப்படும் அனைத்து எழுத்துக்களுக்கும் ஒருங்கிசையக்கூடியவாறு ஒரு எழுத்துரு உருவாக்கப்பட வேண்டுமென ICTA வின் LLWG குழு தீர்மானித்தது.

தரநிலை SLS 1134: 2004 உடன் இணக்கமான ஒரு சிங்கள எழுத்துருவை உருவாக்க LLWG விரும்பியது, அத்துடன் இதன் மூலம் தரநிலை SLS 1134: 2004 இல் பயன்படுத்தப்பட்ட முழுமையான எழுத்துக்களைப் அதிலும் பயன்படுத்த முடியும். பழைய சிங்களம் மற்றும் பாலி (சிங்கள மொழியில் எழுதப்பட்ட) புத்தகங்கள் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை எழுதுவது இன்னொரு தேவையாக இருந்தது. இதன் அர்த்தம், எழுத்துருவானது SLS தரநிலையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி நிலை 3 எழுத்துருக்களில் ஒன்றாக இருக்க வேண்டும். யுனிகோட் இணக்கமான சிங்கள எழுத்துரு “பாஷித” ற்கான விதிகளை எடிரிவீர அம்மணியார் உருவாக்கினார் இதற்காக ICTA அவருடன் ஒப்பந்தமிட்டது, அத்துடன் திரு. பேமசிறீ வடிவமைத்த கிளிஃப்ஸுடன் அதை பூர்த்திசெய்தார். எடிரிவீர அம்மணியார் பரிந்துரைத்ததற்கமைய எழுத்துருவிற்கு “பாஷித” எனப் பெயரிடப்பட்டது. கலையுணர்வுடனான சரியான சிங்கள எழுத்துருவாகிய “பாஷித” மூன்று நிலைகளில் உருவாக்கப்பட்டது மற்றும் ஒவ்வொரு நிலையிலும் உள்ள ஒவ்வொரு எழுத்துருவும் செரிப் மற்றும் சான்ஸ் செரிப் எழுத்துருக்களுடனான ஒரு எழுத்துரு குடும்பத்தினைக் கொண்டிருந்தது. கிரியேட்டிவ் காமன்ஸ் அட்ரிபியூசன் உரிமத்தின் கீழ் ICTA இந்த எழுத்துருவை இலவசமாக வழங்குகின்றது. மொஸிலா பயர்பொக்ஸ் இந்த எழுத்துருவை வழங்குமாறு கோரியது மற்றும் இதற்காக ஒரு இலகுவான பதிப்பு “பாஷிதஸ்கிறீன்” மொஸிலா பயர்பொக்ஸிற்கு வெளியிடப்பட்டது. எடிரிவீர அம்மணியார் இவ் எழுத்துரு விதிகளை “ஹோடிபோதா” எழுத்துருவில் பயன்படுத்தினார். தேசிய கல்வி ஆணைக்குழுவிற்காக, புத்தகங்களில் பயன்படுத்துவதற்காக அதாவது தரம் 1 மற்றும் தரம் 2 வகுப்புகளில் சிறிய குழந்தைகளுக்கான புத்தகங்களில் பயன்படுத்துவதற்காக “ஹோடிபோதா” எழுத்துருவினை ICTA பெற்றுக் கொண்டது. அதனையடுத்து, கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியில் ICTA வின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற எழுத்துரு வடிவமைப்பாளர்களுக்கான பயிற்சியில் வள நபராக எடிரிவீர அம்மையார் கலந்துகொண்டார். இவர் உள்நாட்டு மொழிகள் பணிக்குழுவில் கடந்த 08 ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளார். யுனிகோட் இணக்கத்தன்மைக்கு மாற்றுவதற்கான இந்த தீவிரமான முயற்சிகளினை தற்போது கிடைக்கக்கூடிய பல சிங்கள வலைத்தளங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் காணக்கூடியதாக உள்ளது.

உள்ளூர்மயமாக்கல் (மொழிபெயர்ப்புக்கான) மென்பொருளை உருவாக்குவது தினீசா எதிரிவீர அம்மையாரின் பேரார்வமாக இருந்தது. எனவே M.Sc பட்டத்திற்கான அவரது ஆய்வானது மொழிபெயர்ப்புப் பகுதியினைச் சார்நததாக இருந்தது. இந்த ஆய்வு பேராசிரியர் கிஹான் டயஸின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டது, பிந்தைய செயலாக்க நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சிங்கள ஓப்டிகல் எழுத்து அங்கீகாரத்தின் வெளியீட்டை மேம்படுத்துதல் ஆய்வின் தலைப்பாக இருந்தது. சிங்கள மொழியானது சொல் உருவாக்கம் மற்றும் இலக்கண வடிவத்தில் ஒரு சிறந்த கட்டமைப்பினைக் கொண்டிருப்பதாக தினீசா எடிரிவீர அம்மணியார் கூறுகின்றார். அத்துடன் மொழிபெயர்ப்பு மென்பொருளுக்கு கிடைக்கக்கூடியவாறு இக் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய அவர் விரும்புகிறார்.