இத்திட்டத்தின் உள்நோக்கமானது இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப அபிவிருத்தியினது வரலாற்றினை பதிவு செய்வதாகும். ஆகவே இந் நாட்டில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப அபிவிருத்தியில் தமது இலக்குகளை அடைந்தவர்களின் நினைவுகளை சேகரிப்பதற்காக இவ் இணையத்தளத்தினை உருவாக்கியுள்ளோம். இது சாதனைகளைப் பெற்றவர்களின் சாதனைகள் தொடர்பாகவும் மற்றும் அவர்களது அனுபவங்களை வீடியோ நேர்காணல் மூலமாகவும் பதிவிடும் செயற்பாடாகும், அவ்வாறில்லாதவர்களின் எந்தவொரு ஆவணமும் பதிவிடப்படவில்லை. இப்பதிவுகள் தனிப்பட்ட அனுபவங்கள் மற்றும் சாதனைகள் பற்றியது இவற்றினை ஒருமித்து, இலங்கையில் தகவல் தொடர்பாடல் தொழினுட்ப அபிவிருத்தியின் முழுமைமான வரலாற்றினுடன் சேர்க்கலாம். குறிப்பிடத்தக்க சாதனைகள் செய்தவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள் மாணவர்களுக்கு மற்றும் ஆய்வுகளுக்கு முதன்மையானவையாகும். ஆனால் அதிமுக்கிய தேவையாக அடுத்த சந்ததியினருக்காக இவ் வரலாறு ஆவணமிடப்பட வேணடும்.
ஓரு ஆவணமாக இலங்கையின் மற்றய அம்சங்களின் வரலாறுடன் இவை இணைக்கப்பட வேண்டியது முக்கியமாகும். இப்பதிவுகளாவன அறுபதாம் ஆண்டிற்குப் பின்பகுதியிலிருந்து இலங்கை தகவல் தொடர்பாட தொழினுட்ப நிறுவனத்தினால் (ICTA) செயற்படுத்தப்பட்ட இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தின் நிறைவு வரையான ஆறு தசாப்த காலத்தினை உள்ளடக்கியதாக உள்ளது.
இவ் முயற்சிக்கான அவசியத்தினை முதலில் உணர்ந்தவர் பேராசிரியர் கிஹான் டயஸ். இவர் பின்னர் ICTA இல் திட்டப் பணிப்பாளராக இருந்ததுடன் இவ் யோசனையினை 2004 காலப்பகுதியில் நிறைவேற்றினார். ஆனால் அந்நேரத்தில் இத்திட்டம் சிறப்பாக இருக்கவில்லை. இதற்கிடையில் காலஞ்சென்றவர்களான பேராசிரியர் வி.கே.சமரனாயக்க மற்றும் டாக்டர் ஆர்.வீ. ஏக்கனாயக்க ஆகியோர் தகவல் தொழினுட்ப அரங்கில் தமது செயற்பாடுகளினால் புரட்சியை உண்டாக்கினர்.
தற்போது இச் செயற்திட்டத்திற்கு இலங்கை LK டொமைன் பதிவகத்தால் (LKNIC) நிதி வழங்கப்படுகின்றது. காணொளி பதிவுகள் காணப்படும் பகுதிகள் கீழே காட்டப்படுகின்றது.
கணனிமயமாக்கம் மற்றும் இ-அரசாங்கம்,மேம்படுத்துகின்ற சுற்றுச்சூழல், தொழில்துறை, இணையம் மற்றும் தகவல் பாதுகாப்பு மற்றும் மொழி தொழினுட்பம்