- கலாநிதி காமினி விக்ரமசிங்க
கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் இலங்கையில் மென்பொருள் தொழில்துறை மற்றும் தனியார் கல்வித் துறையில் ஒரு முன்னோடியாவார், இவர் இன்போமெற்றிக்ஸ் குழுவின் ஒரு ஸ்தாபகர் மற்றும் தலைவரும் ஆவார்.
இவர் இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் நாடுகளில் பல்கலைக்கழக கல்வியினைக் கற்றார். இவர் 1983 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பியதுடன் ஒரு கணினி கம்பனியான இன்போமெற்றிக்ஸ் இனை ஸ்தாபித்தார். இன்போமெற்றிக்ஸ் ஆனது ஒரு மொத்த ஆயத்த தயாரிப்பு தீர்வு கம்பனி, அதன் மூலம் வன்பொருள், மென்பொருள், பயிற்சி மற்றும் பராமரிப்பு என்பன வழங்கப்பட்டன – அதாவது முழு அளவிலான தேவைகள் வழங்கப்பட்டன.
இலங்கையின் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறிய தகவல் தொழிநுட்ப பட்டதாரிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டதால் இலங்கையின் தேவைகளை நிவர்த்தி செய்வதிலும், இலங்கையில் மனிதவள மேம்பாட்டுத் துறையில் ஒரு பற்றாக்குறை இருந்ததையும் உணர்ந்து கொண்டார். இதற்காக இன்போமெற்றிக்ஸ், 1990 ஆம் ஆண்டு மன்செஸ்டர் மெற்றோபொலிற்றன் பல்கலைக்கழகத்தின் ஆதரவுடன் தகவல் முறைமை மற்றும் கணினி விஞ்ஞானத்தில் தகவல் தொழினுட்ப பட்டங்களை வழங்கியது. பிரிட்டிஷ் பட்டப்படிப்புகளை இலங்கையில் வழங்கிய முதல் நிறுவனமாக இன்போமெற்றிக்ஸ் காணப்பட்டது. ஆகவே இலங்கையில் மூன்றாம் நிலை பிரிட்டிஷ் கல்வியை வழங்கிய ஒரு முன்னோடியாக கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் கருதப்படுகின்றார்.
IIT இன் பழைய மாணவர்கள் தொழில் முனைவோருக்கான வணிகங்களை ஆரம்பிப்பதற்கும் அவர்கள் தமது சொந்த செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் ஊக்குவித்ததாக திரு.விக்ரமசிங்க கூறுகிறார். மூன்றாம்நிலை கல்வி நிறுவனங்கள், சர்வதேச அளவில் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உள்ள மற்றும் மிகவும் பொருத்தமான இடங்களில் தனிநபர்களை உருவாக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். இதன் மூலம் உருவாக்கப்படும் மனித வளங்கள் “சர்வதேச அளவிலான உற்பத்தி”களாகக் கருதப்படுவதால் அந்நிய செலாவணி வருவாய் மற்றும் ஏனைய பொருளாதார நன்மைகளுக்கூடாக இலங்கை மகத்தான நன்மையினை அடையமுடிகின்றது. இலங்கையின் குறிப்பிட்ட முக்கிய இடங்களை அபிவிருத்தி செய்வதற்கு இது மிகவும் பொருத்தமானது என கலாநிதி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கலாநிதி காமினி விக்ரமசிங்க அவர்கள் தகவல் தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பப் பிரிவு தொழில்துறையில் ஒரு முன்னோடியாகப் பாராட்டப்பட்டார், அத்துடன் 2014 ஆம் ஆண்டு இன்போரெல் இன் போது FITIS இனால் (இலங்கை தகவல் தொழில்நுட்ப தொழிற்துறை சம்மேளனம்), அவர் ICT தொழில்துறையில் பல ஆண்டுகள் ஆற்றிய சேவைக்காக பாராட்டுக்குரிய அடையாளமாக கருதப்பட்டு விருதளிக்கப்பட்டார்.
- பேராசிரியர் லலித் கமகே
பேராசிரியர் லலித் கமகே அவர்கள் இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவனத்தின் (SLIIT) தலைவர் மற்றும் சிரேஷ்ட நிர்வாக அதிகாரியாகவும் இருக்கின்றார். இவர் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் மின்னணு மற்றும் தொலைத்தொடர்புப் பொறியியல் துறையில், இளங்கலை பட்டப்படிப்பிற்கு தெரிவு செய்யப்பட்டார். இது தனது வாழ்க்கையை மாற்றியதாக அவர் கூறுகின்றார். லலித் கமகே பட்டம் பெற்ற பிறகு, மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.Read More...லலித் கமகே லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் IT துறையில் முதுகலை பட்டம், மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மெகாட்ரானிக் பொறியியலில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்.
கலாநிதிப் பட்டம் பெற்றுக் கொண்டதன் பின்னர் அவர் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திற்குத் திரும்பினார், அங்கு அவர் ஒரு சிரேஷ்ட விரிவுரையாளராக இருந்தார். அவர் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதில் ஆர்வமாக இருந்தார். பல்கலைக்கழகம் அவரை கணினி மையத்தின் பணிப்பாளராக நியமித்தது, இது ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் (EDB), முதலீட்டு வாரியம் (BOI) மற்றும் தனியார் துறை IT நிறுவனங்கள் போன்ற அரசு நிறுவனங்களுடன் பணிபுரியும் வாய்ப்பை அவருக்கு வழங்கியது.
பேராசிரியர் கமகே தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதில் மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளார். மேலும், இலங்கை அரசாங்கத்திற்கும் பல்வேறு துறைகளில் பணியாற்றியுள்ளார். இவர் நவீன தொழினுட்பத்திற்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தின் (ACCIMT) தலைவராகப் பணியாற்றியுள்ளார். மேலும், இலங்கை கணினி அவசர தயார்நிலை குழுவின் வாரியத்தில் | ஒருங்கிணைப்பு மையத்தில் (SLCERT | CC) பணியாற்றியுள்ளார். பேராசிரியர் லலித் கமகே அவர்கள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியத்தின் வர்த்தக தகவல் வலையமைப்பான “TradeNetSL” இனை உருவாக்குவதற்கு ஒரு கருவியாக இருந்தார். தாங்கள் அறிமுகப்படுத்திய இ-வர்த்தகத் தளமான “சைபர்டிரேடர்” மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு உள்ளூர் நிறுவனங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. இது நாட்டின் முதல் இ-வர்த்தகத் தளமாகும்.
USAID நிதியுதவி அளித்த போட்டித்திறன் முயற்சியின் ICT ஒருங்கிணைப்பின் கீழ், ICT மூலோபாயத்தை வளர்ப்பதில் பேராசிரியர் லலித் கமகே முக்கிய பங்கு வகித்தார். இது இ-இலங்கை மேம்பாட்டு திட்டத்தின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்தினை (ICTA) உருவாக்கியது.
1999 இல் இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தினை (SLIIT) உருவாக்கியது அவரது முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். நாட்டில் தகுதி வாய்ந்த IT நிபுணர்களின் பற்றாக்குறை இருப்பதனையும் மேலும் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்பத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உள்நாட்டுப் பல்கலைக்கழகங்களால் உற்பத்தி செய்யப்படும் IT பட்டதாரிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பதனையும் பேராசிரியர் லலித் கமகே உணர்ந்தார்.இது மாலபே வளாகத்தை அமைக்க வழிவகுத்தது அங்கு கடந்த ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் 1000 க்கும் மேற்பட்ட தகவல் தொழில்நுட்பப் பட்டதாரிகள் உருவாக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில் தகவல் தொழில்நுட்பம் அடிப்படையிலான கற்கைகளை மட்டுமே வழங்கிய SLIIT பின்னர் கணினி அமைப்புகள் மற்றும் வலையமைப்பு, தகவல் அமைப்புகள், இணையப் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் மென்பொருள் பொறியியல் பட்டப்படிப்பு கற்கைகள் குறித்த பட்டப்படிப்புகளை வழங்கத் தொடங்கியது. SLIIT முதுகலைப் பட்டப்படிப்புகளையும் வழங்கத் தொடங்கியது, மேலும் தொழில்துறையுடன் இணைந்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது.
- திரு. நீல் குணதாச
திரு. நீல் குணதாச களனிப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான இளமானிப் பட்டம், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முதுகலை முகாமைத்துவ நிறுவனத்தில் கல்வி முகாமைத்துவத்தில் ஒரு பட்டப் பின் கற்கை டிப்ளோமா, கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வியியல் பட்டப் பின் கற்கை டிப்ளோமா, மகரகம தேசிய கல்வி நிறுவனத்தில் (NIE) கல்வி நிர்வாகத்தில் பட்டப் பின் கற்கை டிப்ளோமா, இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் தகவல் முகாமைத்துவத்தில் ஒரு முதுகலை விஞ்ஞானப் பட்டம் ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
திரு. நீல் குணதாச தற்போது இலங்கையின் கல்வி அமைச்சின் தரவு முகாமைத்துவக் கிளையின் கல்விப் பணிப்பாளராக (SLEAS-I) உள்ளார். கல்விமுறை குறித்த தரவு மற்றும் தகவல்களைத் தயாரிப்பதைக் குறிக்கும் தேசிய கல்வி முகாமைத்துவத் தகவல் அமைப்பைச் (NEMIS) செயற்படுத்துவது அவரது முக்கிய பொறுப்புகளில் ஒன்று, திரு. குணதாச 2006 முதல் 2016 வரை கல்வி அமைச்சின் ICT கிளையில் கல்விப் பணிப்பாளராக இருந்தார், அங்கு முழு நாட்டிலும் தாக்கம் செலுத்தியதும் மற்றும் ICT கல்வி அரங்கில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தியதுமான பல முக்கிய திட்டங்களை செயல்படுத்த அவர் பொறுப்பேற்றார்.
- பேராசிரியர் சாம் கருணாரத்ன
பேராசிரியர் சாம் கருணாரத்ன அரை நூற்றாண்டுக்கு முந்தைய காலகட்டத்தை நினைவு கூர்ந்தார் – அதாவது 1960 களில் – இலங்கையில் கணினிமயமாக்கல் தொடங்கியது, அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்டது. 1960 களின் பிற்பகுதியில் அரசாங்கம் ஒரு கணினியை அரசு துறை நிறுவனத்திற்கு ஒதுக்க முடிவு செய்ததை அவர் நினைவு கூர்ந்தார். கட்டிட துறை பொறியியலாளரும், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் (SEC) ஸ்தாபக தலைவருமான கலாநிதி ஏ.என்.எஸ். குலசிங்க, தனக்கு கணினியொன்றின் தேவை மிக அதிகமாக இருப்பதாக குறிப்பிட்டார். இதற்காக, ஒரு கணினியை வாங்குவதற்கு SEC இனால் 2 மில்லியன் ரூபாய்க்கும் சற்று அதிகமான தொகையொன்றை ஒதுக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவின் பெர்க்லி, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இருந்த பேராசிரியர் சாம் கருணாரத்ன, ஏப்ரல் 1967 இல் இலங்கைக்கு திரும்பி SEC இல் சேர்ந்தார். SEC ஆரம்பத்தில் IBM System/360 கணினியை கொள்வனவு செய்ய முயற்சித்தது, ஆனால் அந்த கணினி அப்போது இலங்கையில் விற்பனைக்கு வரவில்லை என்பதை அவர்கள் உணர்ந்தனர். எனவே, SEC ஆனது ICL 1900 தொடர் மெயின்பிரேம் கணினியை வாங்கியதுடன், அதில் அறிவியல் மற்றும் பொறியியல் பணிகளை மேற்கொள்வதற்கான வசதிகள் இருந்தன. இதுவே இலங்கையின் முதல் கணினியாகும். கணினியினை கொள்வணவு செய்வதற்காக முன் கட்டளையிடப்பட்டு இருந்தாலும் விநியோகத்துக்கு சில மாதங்கள் கழிந்தன. SEC பின்னர் கணினி பணியாளர்களை நியமித்தது; அமைப்பு பகுப்பாய்வாளரகள், நிரலர்கள் (புரோகிராமர்கள்), கணினி இயக்குநர்கள் மற்றும் தரவு பதிவு இயக்குநர்கள் (ஆபரேட்டர்கள்). நான்கு அமைப்பு பகுப்பாய்வாளர்களாக கலாநிதி ஆர்.பி. ஏகநாயக்க, திரு ரஞ்சன் பெரேரா, திரு எஸ்.ஜே. சில்வா ஆகியோருடன் மற்றொருவர் SEC இன் சம்பள பட்டியலை கணினிமயமாக்க நியமிக்கப்பட்டார்.
- பேராசிரியர் லலித் கமகே
top