திரு. ஈரன் விக்கிரமரத்ன

திரு. ஈரன் விக்ரமசிங்க அவர்கள் ICT யில் உயர் அரசாங்க நிறுவனமான இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப (ICTA) நிறுவனத்தின் தலைவராவார், அத்துடன் ICT தொடர்பாக அரசாங்கத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கட்டாயப்படுத்தினார். இவர் 2002 ஆம் ஆண்டு பொருளாதார அறிவியல் சீர்திருத்தம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் ஆலோசகராகவும், ICTA வினை ஸ்தாபிப்பதற்கு பிரதானமானவராக இருந்ததுடன் இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தினை வரையறுப்பதற்கும் பங்காற்றினார், இவற்றிற்கு அவரது உரையாடல் திறமையே காரணமாகும்.

திரு. விக்கிரமசிங்க அவர்கள் உலக வங்கியுடன் தொடர்புபட்ட இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தினை, வேறு எந்தவொரு நாடும் பெற்றிராத முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டமாகக் குறிப்பிடுகின்றார் ஆகவே அது ஓரு முன்னிலையான திட்டமாயிருந்தது இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தினை திட்டமிடும் போது முதலில் அதற்கு ஒரு தூரநோக்கு வேண்டுமெனக் கருதினார். பின்னர் ஒரு திட்டமும் ஒரு திட்டவரைவும் வடிவமைக்கப்பட்டது. அதன்பின்னர் அத் திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என விரிவாக தீர்மானிக்க செயற்பாடுகள் தேவைப்பட்டது. ஒரு கண்காணிப்பு முறை அங்கு அவசியமானது. இவ்வாறான திட்டங்களின் போது பேண்தகைமை நிச்சயப்படுத்தப்பட வேண்டும் அத்துடன் அனைத்து நன்மைகளும் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் போய்ச்சேர வேண்டுமென மேலும் கூறினார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


திரு. ஈரன் விக்ரமரெத்ன அவர்கள் ரோயல் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் லண்டன் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளியலைக் கற்றார் அத்துடன் பொருளியலில் நிபணத்துவம் பெற்றார்.

திரு. விக்ரமரெத்ன அவர்கள் ICT அரங்கிற்குள் உள்நுழைந்தது எதிர்பாராததொன்றாகும். இவர் 1984 ஆம் ஆண்டு ஒரு சர்வதேச வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார், அங்கு அவர் மின்னஞ்சல் அனுப்புவதனை அறிமுகப்படுத்தினார் ஆனால் அந்நேரத்தில் இலங்கையில் அதிகமான மக்கள் அது பற்றி அறிந்திருக்கவில்லை. இது ஆரம்ப தூண்டுதல் ஆகும். பின்னர், இவர் இலங்கை தேசிய அபிவிருத்தி வங்கியில் CEO ஆக இருந்தபோது பொருளாதார சீர்திருத்தம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த மிலிந்த மொறகொட அவர்களிடம் அறிமுகப்படுத்தப்பட்டார். அமைச்சர் அவர்கள் ICT யினை அபிவிருத்தியில் எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என அறிய விரும்பினார். அவர் பிரதமருடன் கலந்துரையாடிய பின்னர் திரு. விக்ரமரெத்ன அவர்களை இந்த முன்முயற்சிக்குத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார். இதற்கு திரு. விக்ரெமரத்னவின் அபிவிருத்தி பற்றிய உரையாடலே இதற்குக் காரணம் என அமைச்சர் விளக்கினார்.

பின்னர் ஒரு குழு உருவாக்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் திரு. ஹன்ஸ் விஜயசூரிய, பேராசிரியர் ரொகான் சமரஜீவ, கலாநிதி ருவான் வீரசிங்க, திரு. ஜெயந்த பெர்னான்டோ, திரு. கவன் ரத்னாயக்க மற்றும் கலாநிதி அஜித் மதுரப்பெரும ஆகியோர் பங்குபற்றினர். உலக வங்கியுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன, அதில் முன்வைக்கப்பட்ட ஆரம்ப யோசனைகள் பற்றி ஆர்வம் காட்டப்பட்டது.

திட்டவரைபினை வரைவது முதல் தேவையாகவிருந்தது; தூரநோக்குடன் செயற்பட நேரிட்டது, என்னெனன செய்யவேண்டும் அத்துடன் எவ்வாறு அவை அடையப்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது மற்றும் ஒரு திட்டம் வடிவமைக்கப்பட்டது. அதன்பின்னர் அவை எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என சிந்திக்க வேண்டிய தேவையேற்பட்டது. நடைமுறைப்படுத்துவதற்கு வளங்கள் தேவைப்பட்டது. வழிகாட்டும் குழு உருவாக்கப்பட்டது அதற்கு உலக வங்கியின் திரு. நாகி ஹன்னா உதவி புரிந்தார், அவர் ஒன்றிணைத்தலினூடாக அபிவிருத்திக்கு ICT எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றது என உன்னிப்பாக கவனித்தார். திரு. விக்ரமரெத்ன அவர்கள் இது போன்ற துணிகர செயலைத் தொடங்கும் பொழுது திட்டவரைபிற்கான தேவயை வலியுறுத்தினார் – அதிலுள்ள ஒவ்வொரு கூறுகளுக்கும் மிகவும் திட்டவட்டமான இலக்குகளுடன் ஒரு திட்டவரைவு.

இதனால் இ- இலங்கை அபிவிருத்தித்திட்டம் உருவானது.

இது உலகில் எந்தவொரு நாடும் பெற்றிராத, உலக வங்கியின் உள்வாங்கலுடன் காணப்பட்ட முதல் ஒருங்கிணைக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டமாகும். ஆகவே, இது ஒரு முன்னிலையான திட்டமாகும். இ-இலங்கைத் திட்டத்தின் கூறுகள் இங்கு இணைக்கப்பட்டுள்ளது: கொள்கை உருவாக்கம்; உட்கட்டமைப்பு இணைப்புக்களை மேம்படுத்துதல் மற்றும் விழிப்புணர்வினை உண்டாக்குதல்; மனிதவள அபிவிருத்தி; அரசாங்கத்தினை மீள்கட்டியெழுப்புதல் மற்றும் தொழில்நுட்பக் கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் தரநிலைகள்.

2003 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ICT சட்ட இலக்கம் 27 நடைமுறைக்கு வந்ததாலும், 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி சட்ட இலக்கம் 11 லுள்ள குறிப்பிட்ட பாகத்தின் படி, ICT யில் உயர் தீர்மானங்களை எடுக்கும் முன்னைய கட்டமைப்பின் கீழ், தகவல் தொழில்நுட்பத்திற்கான பேரவையின் (CINTEC) செயற்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டதுடன் CINTEC ஆனது முடக்கப்பட்டது. இதனை விளக்கும் திரு.விக்ரமரெத்ன அவர்கள், தூரநோக்கினை வழங்குவதற்கு தகைமைகள் மற்றும் நிபுணத்துவம் தேவை எனவும், திட்டவரைவினை நடைமுறைப்படுத்துவது CINTEC இல் இல்லாத காரணத்தினால் நிறுவனத்தினை முடுவது உகந்தது எனக் கூறினார்.

இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) 2003 ஆம் ஆண்ட ஜூலை மாதம் முதலாம் திகதி கொழும்பு கிரிமந்தல மாவத்தையில் ஸ்தாபிக்கப்பட்டதுடன் அதன் செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டன. திரு விக்ரமரெத்ன அவர்கள் அதன் முதல் தலைவரும், திரு. மஞ்சு கத்தோற்றுவ அவர்கள் அதன் முதல் CEO ஆகவும் இருந்தனர். அத்துடன், வெளிநாட்டிலிருந்து பணிக்கமர்த்தப்பட்டு அதனையடுத்து மஞ்சு அவர்களை வெற்றி கண்டு ICTA ற்குத் தலைமை தாங்கிய திரு. ரேஸான் தேவபுர அவர்கள், தொழில்நுட்ப கட்டமைப்பு, பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் துறையில் திட்டப் பணிப்பாளராகவிருந்த பேராசிரியர் கிகான் டயஸ் அவர்கள், மற்றும் திரு. வசந்த தேசப்பிரிய அவர்கள் திட்ட நிபுணராக இருந்த போது “மீளமைக்கபட்ட அரசாங்கம்” பிரிவிற்கு ஆரம்பத்தில் தலைவராயிருந்த திரு. லலித் வீரத்துங்க ஆகியோர் ஆரம்பக் குழுவில் அங்கத்தவராக இருந்தனர். மேலும் இவ் ஆரம்பக் குழு திரு.டிலந்த விதானகே, திரு. பற்றிக் கனகசிங்கம், திரு.ஜெயந்த பெர்னான்டோ மற்றும் திரு. ரீஸா ஸாருக் ஆகியோரை உள்ளடக்கியிருந்தது.

தனியார் துறையினை ஊக்கப்படுத்தி அத்துடன் இலங்கையின் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டிய தேவையுள்ளதாக திரு. விக்ரமரெத்ன அவர்கள் விளக்கினார். இவர் அபிவிருத்தியானது வருவாய்கள் மற்றும் வேலைவாய்ப்புகளின் விளைவாக இருக்க வேண்டும் என்றும், அபிவிருத்தியானது நாட்டில் வசிக்கும் அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தினையும் உயர்த்த வேண்டும் எனவும் கூறினார். இந்த கட்டத்தில், இலங்கைக்கு வருகின்ற ஆர்வமுள்ள பல அயலாக்க (outsourcing) கம்பனிகளுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாக அவர் நினைவு கூர்கிறார். தொடர்ச்சியாக, HSBC நிறுவனம் இலங்கையில் தமது அயலாக்க (outsourcing) செயற்பாடுகளை முன்னெடுத்ததுடன் WNS நிறுவனம் ஒரு BPO னையும் ஸ்தாபித்தது.

திரு. விக்ரமரெத்ன அவர்கள் பல ஆண்டுகளாக அபிவிருத்தியை மதிப்பிடும் போது தனியார் துறையின் முக்கியத்துவமும் அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றங்களும் வெகுவாகக் குறைந்துள்ளதாகவும், அத்துடன் இந்தப் பகுதிகளில் அதிக கவனம் செலுத்தபட வேண்டும் எனவும் கூறினார். மேலும், தனியார் துறையானது முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்திலிருந்ததைக் காட்டிலும் மிகக் குறைவாக ஒத்திசைப்பதாகவும் மற்றும் இ-இலங்கை அபிவிருத்தித் திட்டம் ஆனது தனியார் துறை அதனது இருப்பினை ஒருங்கிணைப்பதற்கு உதவியதாகவும் கூறினார்.

திரு.லலித் வீரதுங்க அவர்கள் இ-அரசாங்கத்திட்டத்திற்கு தலைவராக வந்தமையானது அத்திட்டத்தினை சிறப்புற ஒழுங்குபடுத்த உதவியாக இருந்ததாக திரு. விக்ரமரெத்ன அவர்கள் கூறினார். தொழில்நுட்பத்தினை அணுகி அதன்மூலம் பயன் பெற முயலும் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கு அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டுமென அவர் கூறினார்.

அனைவரும் தகவல் தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பெறவேண்டும், பொருத்தமான பயிற்சிகள் மற்றும் உள்ளீடுகளைப் பெறவேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் ரெலி-சென்ரர்ஸ் அதாவது பின்னர் “நெனசல” என அழைக்கப்பட்ட மத்திய நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டன. பொருத்தமான தமிழ் மற்றும் சிங்கள நிகழ்ச்சி நிரல்கள் வடிவமைக்கப்பட்டு அவை ICTA வின் இ-சமூகத் திட்டத்தின் மூலம் கிடைக்கக்கூடியதாக இருந்தது.நெனசல நிகழ்ச்சித் திட்டத்தினைப் பயன்படுத்தியதால் அதனை நடைமுறைப்படுத்தியதன் இறுதிக் கட்டத்தில் பொருளாதார முறையில் மாற்றம் ஏற்பட்டதாகவும், அதன் ஆரம்பக் கட்டத்தில் இவ் மத்திய நிலையங்கள் வணிக ரீதியாகச் சாத்தியமானதாகவும் அத்துடன் அவை மக்களுக்கு அரசாங்க சேவைகளை சிறப்புற கிடைப்பதற்கு வழிவகுத்ததாகவும் திரு. விக்ரமரெத்ன அவர்கள் கூறினார். இவர் இவ் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது பேண்தகைமையை முக்கியமாக கவனத்திற் கொண்டார்.

ICTA வினது சுற்றுச்சூழலை மேம்படுத்தல் செயற்திட்டமானது, திரு.ஜெயந்த பெர்னான்டோ அவர்கள் திட்டப் பணிப்பாளராக இருந்தபோது நிறுவன அபிவிருத்தி, இ-தலைமைத்துவம், உள்நாட்டு மொழிகளை முன்னெடுத்தல், மதிப்பீடு மற்றும் அனுமானித்தல் மற்றும் இ-சட்டங்கள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது. இப்பகுதிகளின் கீழ் கணினிக் குற்றம் சார்பாக 2007 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்ட இலக்கம் 24 மற்றும் 2006 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இ-பரிமாற்றங்கள் சட்ட இலக்கம் 19 ஆகியவற்றிற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. மேலும் ICTA ஆனது இணையவழி குற்றங்கள் (இணைய குற்றங்கள்) தொடர்பான பூடபெஸ்ட் உடன்படிக்கையில் இலங்கையை இணைக்கும் செயற்பாட்டினை ஆரம்பிப்பதற்கான வேலைகளையும் முன்னெடுத்தது. உட்கட்டமைப்பு மற்றும் இ-அரசாங்க சேவைகளை நடைமுறைப்படுத்துவதனால் சட்ட உட்கட்டமைப்பினையும் மேம்படுத்த முடியுமென திரு.விக்ரமரெத்ன கூறினார். அது இ-இலங்கை திட்டவரைவின் ஒரு பாகமாக இருந்தது.

இவை திரு. ஈரன் விக்ரமரெத்ன அவர்களால் 15 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட பூரணமான அபிவிருத்தித் திட்டங்களின் நினைவுகளாக உள்ளன.

திரு. ஈரன் விக்ரமரெத்ன அவர்களின் கூற்றுக்கள் பின்வருமாறு முடிகிறது: முதலில் ஒரு தூரநோக்கு அவசியமாகும். பின்னர் ஒரு திட்டம் மற்றும் ஒரு திட்டவரைவு வடிவமைக்கப்பட வேண்டும். அதிலிருந்து அத்திட்டம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என தீர்மானமிக்கதான வேலைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது. அவ்விடத்தில் ஒரு கண்காணிப்பு முறைமை அவசியமாகின்றது. பேண்தகைமை கட்டாயமாக நிச்சயப்படுத்தப்படுவதுடன் முதலீடானது திரும்ப கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும்.

இறுதியில் எல்லா நன்மைகளும் இவ் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும்.

மூலங்கள்/வளங்கள்: