திரு. ஹர்ஷா விஜயவர்தன

திரு.ஹர்ஷா விஜயவர்தன அவர்கள் தீக்ஸனா நிறுவனத்தின் (கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியால் (UCSC) நிர்வகிக்கப்படுகின்ற ஒரு நிறுவனம்) தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக இருக்கின்றார் அத்துடன் இலங்கையில் இன்ரநெட் ஓஃப் திங்ஸ் (IoT) இல் ஒரு ஆரம்ப நிறுவனத்தின் பணிப்பாளர்/CEO ஆகவும் இருக்கின்றார்.

திரு.ஹர்ஷா விஜயவர்தன அமெரிக்காவின் மியாமி பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஆவார், அத்துடன் ICT யில் 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். மேலும் இவர் UCSC இன் மென்பொருள் மேம்பாட்டுப் பிரிவின் (SDU) உருவாக்கத்திலும் ஈடுபாடு காட்டினார். அவர் மற்றும் அவரது குழுவினர் SDU இல் இலங்கை அரசாங்கத்திற்கான மென்பொருளை உருவாக்கும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தனர்.
இவர் இலங்கையில் இணையம் மற்றும் இ-ஆளுமையினை அபிவிருத்தி செய்வதற்கு மிகுந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். இவர் தகவல் தொழினுட்பப் பேரவையின் (CINTEC) இணையக் குழுவின் ஒரு உறுப்பினராக இருந்தார். அங்கிருந்தபோது தான் சிங்கள யுனிகோட் நடைமுறைப்படுத்தும் வேலை முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. திரு. விஜயவர்தன சிங்கள யுனிகோட்டில் ஆர்வமுள்ளவராக இருந்தார் அத்துடன் அவரது ஆய்வுகூடத்தில் சிங்கள யுனிகோட் இணக்கமான எழுத்துருக்களை உருவாக்கியுள்ளார். இவர் இலங்கை ICT நிறுவனத்தின் (ICTA) உள்நாட்டு மொழிகள் பணிக்குழுவின் ஒரு உறுப்பினராகவும் மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) ICT பிரிவு குழுவின் ஒரு உறுப்பினராகவும் இருக்கின்றார். திரு.ஹர்ஷா விஜயவர்தன அவர்கள் இன்ரநெட் சொசைற்றியின் உள்நாட்டு அத்தியாயத்தின் (ISOC-LK) ஸ்தாபக தலைவராகவும் இருந்துள்ளார். இவர் LK டொமைன் பதிவகத்தின் சபையில் அதன் ஆரம்பத்திலிருந்து சேவையாற்றியுள்ளார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் வர்த்தக இணையத்தளத்துடன் இணைத்துக் கொண்டிருப்பதற்கான 20 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் போது, ISOC, LK டொமைன் பதிவகம் மற்றும் ICTA வினால் அவர் ஒரு இணையத்தள முன்னோடியாக பாராட்டப்பட்டார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி


திரு.ஹர்ஷா விஜயவர்தன ஒரு உயிர்வேதியியலாளராக இருந்தார் பின்னர் ICT ஆலோசகராக மாறினார், அத்துடன் அமெரிக்காவில் புளோரிடாவிலுள்ள மியாமி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவரும் ஆவார். இவர் ICT யில் 25 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இவர் ஆரம்பத்தில், 1996 ஆம் ஆண்டிலிருந்து 2002 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இலங்கையில் இணையம் அபிவிருத்தி மற்றும் இ-ஆளுமை ஆகியவற்றில் மிகப்பெரிய பங்களிப்பினை வழங்கியிருந்தார். இவர் இலங்கை அரசாங்கத்தின் இணைய நுழைவாயிலான www.lk இன் முதல் வெப்மாஸ்டராக இருந்தார் அத்துடன் இலங்கை ஜனாதிபதி செயலக கொள்கை, ஆய்வு மற்றும் தகவல் பிரிவின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.priu.gov.lk யினை வடிவமைத்தார்.

இந்த இணையத்தளம் இறுதியாக இலங்கை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ ஊடகத் தளமாக ஆனது. அதற்கு மேலதிகமாக, இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சினது உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.formin.gov.lk மற்றும் அதனைத் தொடர்ந்து www.mfa.gov.lk ஆகியவற்றினை வடிவமைத்தார். இவை அமைச்சினது உள்ளூர் மற்றும் பரந்த பகுதியிலான வலையமைப்புகளை நிறுவியபோது வடிவமைக்கப்பட்டன.

இந்தக் காலப்பகுதியில், இவர் கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியின் (UCSC) மென்பொருள் வடிவமைப்புப் பிரிவினை (SDU) அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளில் ஈடுபட்டார். அவரும் அவரது குழுவினரும் SDU இல் இருந்தபோது இலங்கை அரசாங்கத்திற்காக மென்பொருள் வடிவமைப்பதில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகச் செயற்பட்டனர் அத்துடன் நிதி அமைச்சினது வெளிப்புற வளங்கள் திணைக்களம், தகவல் திணைக்களம், மேல் மாகாண சபை அத்துடன் பொலிஸ் திணைக்களத்தின் குற்றவியல் புலனாய்வு பிரிவு (சிஐடி) ஆகியவற்றிற்கும் மென்பொருளை வடிவமைத்துள்ளார்கள்.

பல வாராந்த வானொலி நிகழ்ச்சிகளான “இண்டர்நெட் சம்பத் பவித்தயா” அல்லது இணைய வளங்களை சிங்கள மொழியிலும் ஆங்கிலத்திலும் பயன்படுத்தும் பணிகளை மேற்கொண்ட அவரது குழுவினது ஒரு முக்கிய உறுப்பினராக இவர் காணப்பட்டார். இந்த சிங்கள வானொலி நிகழச்சி 1997 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இறுதியாக 2016 ஆம் ஆண்டு இறுதியாக ஒலிபரப்பானது அத்துடன் இது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) ஸ்வாதிஷியா சேவயா இல் ஒலிபரப்பப்பட்ட பழைய நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்தது. www.lk யின் வெப்மாஸ்டராக, இவர் தகவல் தொழினுட்பப் பேரவையின் இணையக் குழுவினது முக்கிய ஒரு உறுப்பினராக ஆனார். இங்குதான் சிங்கள யுனிகோட் முறைமையினை நடைமுறைப்படுத்துவதற்கான முதற் பணி ஆரம்பிக்கப்பட்டது. 1998 ஆம் ஆண்டு, திரு.ஹர்ஷா விஜயவர்தன அவர்கள் கொத்மலை சமூக வானொலி இணையத் திட்டத்தின் வலையமைப்பு வடிவமைப்பாளரானார் இதற்கு UNESCO நிதியுதவியளித்தது. இத் திட்டம் உலகத்தில் முதல் பல்-தேவை தொலைமையம் (ரெலிசென்ரர்) ஆக ஆனது அத்துடன் இலங்கையில் டைனமிக் ரூட்டிங் பயன்படுத்திய முதல் தளமாகவும் இருந்தது.

2002 ஆம் ஆண்டிலிருந்து, இவர் சிங்கள யுனிகோட்டினது தீவிர ஆர்வலர் ஆனார் அத்துடன் சிங்கள யுனிகோட் எழுத்துருக்களை தனது ஆய்வுகூடத்தில் வைத்து வடிவமைத்தார். அந்தக் காலப்பகுதியில் சிங்கள யுனிகோட் ஒழுங்கமைவினை புரிந்து கொள்வது அவரது பிரதான பங்களிப்பாக இருந்தது, இது அந்தக் கட்டத்தில் இலங்கையில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. இலங்கை ICT நிறுவனத்தின் (ICTA) உள்நாட்டு மொழிகள் பணிக்குழு (LLWG) மற்றும் இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் ICT குழுவினதும் ஒரு உறுப்பினராக, சிங்கள யுனிகோட் வடிவமைப்பிற்கு வழிகாட்டி ஆவணமாக இருந்த சிங்கள ICT தரநிலை SLS 1134 இன் திருத்தம் 3 இனை வரைவதற்கு ஒரு செயற்படு உறுப்பினராக இவர் இருந்தார். இந்தக் காலப்பகுதியில், சிங்கள எண்ணுருக்களை இனங்காணல் மற்றும் அவற்றின் யுனிகோட் குறியாக்கம் போன்ற திட்டங்களுக்காக ICTA யினால் பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டது. CINTEC இலிருந்து ICTA ற்கு மாறிய காலகட்டத்தின் போது, இவர் www.fonts.lk யினை பராமரித்தார் அத்துடன் கனடா, IDRC யினால் நிதியுதவியளிக்கப்பட்ட “PAN மொழிபெயர்ப்பு” திட்டத்தின் துணை ஒருங்கிணைப்பாளராக ஆனார். அதற்கு மேலதிகமாக, சரசவி சிங்கள யுனிகோட் எழுத்துருவை வடிவமைப்பதிலும் ஈடுபட்டிருந்தார், அதில் யுனிகோட் எழுத்துரு விதிகளுடன் சோதனை செய்திருந்தார். சிங்கள மொழியில் பல கணிதக் கணிப்புகளை அவரால் அடையாளம் காண முடிந்தது அத்துடன் இரு எண்களின் தொகுப்புகளான சிங்கள இலக்கம் மற்றும் லித் இலக்கம் ஆகியன 2010 இல் யுனிகோட்டில் குறியீடாக்கப்பட்டது மற்றும் அவை இலங்கை தரநிலை SLS 1134: 2011 இல் உள்வாங்கப்பட்டது. இவர் பணிக்குழு (WG2) of ISO/IEC/SC2 யில் இலங்கையை பலமுறை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார், அங்கு இறுதியாக சிங்கள எண்களை யுனிகோடில் குறியீடாக்கினார்.

திரு. ஹர்ஷா விஜயவர்த்தன இலங்கையில் தொலைதூரத் திட்டத்தில் (ரெலிசென்ரர்) Wi-Fi பயன்பாடுக்கான முக்கிய விசாரணையாளர்களில் ஒருவராக இருந்தார். திரு. விஜயவர்தனவால் கம்பகா மற்றும் ஹட்டனில் இரண்டு வைஃபை ஹாட்ஸ்பாட்டுகளை அமைப்பதற்காக மெய்நிகர் கிராமம் திட்டத்திற்காக UCSC மற்றும் சர்வோதய ஆகியவை கன்டியன் IDRC யின் நிதியுதவியினைப் பெற்றன.

திரு. ஹர்ஷா விஜயவர்த்தன இன்ரநெட் சொசைற்றியினது உள்நாட்டு அத்தியாயத்தின் (ISOC-LK) ஸ்தாபக தலைவராக இருந்தார். இவர் H.E இன் ICT ஆலோசகராக சேவையாற்றியுள்ளார். 2010 ஆம் ஆண்டிலிருந்து 2015 வரை தலைவராகவும் இருந்தார். மேலும் இவர் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRC) ICT ஆலோசகராக சேவையாற்றியுள்ளார். இவர் LK டொமைன் பதிவகத்தின் சபையில் அதன் ஆரம்பத்திலிருந்து சேவையாற்றியுள்ளார் அத்துடன் தீக்ஸனா நிறுவனத்தின் (கொழும்பு பல்கலைக்கழக கணினியியல் கல்லூரியால் (UCSC) நிர்வகிக்கப்படுகின்ற ஒரு நிறுவனம்) தலைமைச் செயற்பாட்டு அதிகாரியாக (COO) அதன் ஆரம்பத்திலிருந்து சேவையாற்றியுள்ளார். 2015 ஆம் ஆண்டு இலங்கையில் வர்த்தக இணையத்தளத்துடன் இணைத்துக் கொண்டிருப்பதற்கான 20 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் போது, ISOC, LK டொமைன் பதிவகம் மற்றும் ICTA வினால் அவர் ஒரு இணையத்தள முன்னோடியாக அங்கீகரிக்கப்பட்டார். மேலும், இவர் பல தொடக்க நிறுவனங்களை உருவாக்குவதற்குப் பொறுப்பாக இருந்தார் அத்துடன் தற்போது இலங்கையில் இன்ரநெட் ஓஃப் திங்ஸ் இல் ஒரு ஆரம்ப நிறுவனத்தின் பணிப்பாளர்/CEO ஆகத் தொழிற்படுகின்றார். அத்துடன் இவர் இரு புத்தகங்களையும் பல கட்டுரைகளையும் (வெளியீடுகள்) எழுதியுள்ளார்.

தொகுப்பு

Resources

Telecentre-Academy-V-village