தொழில்துறை

  • திரு.அபய அமரதாச

    திரு.அபய அமரதாச அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றார், அத்துடன் அசோசியேற்றட் நியூஸ்பேப்பர் ஒப் சிலோன் லிமிடெட் (ANCL) இன் பொது முகாமையாளரும் ஆவார். இவர் பாடசாலையில் கல்வி பயிலும் போது அச்சிடக் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது, அதனைப் பின்புலமாகக் கொண்டு ANCL இல் வேலைக்கு விண்ணப்பித்தார். இவர்

    ANCL இல் 1980 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார். திரு.அமரதாச கிறபிக் ஆட் மற்றும் பிரின்ரிங் தொழினுட்பத்தில் தொழிலைப் பெற்றுக் கொண்டார். இவர் கவரிங் ஓஃப் செற் லிதோகிராப் அச்சிடும் தொழினுட்பம், அச்சிடுவதற்காக வடிவமைத்தல், செலவு மற்றும் மதிப்பீடு மற்றும் கிராஃபிக் ரெப்ரோ போட்டோகிராபி ஆகிய மூன்றாம் நிலைக் கற்கை நெறிகளில் முதல் தரத்தில் தங்க விருதுகளைப் பெற்றார். இவர் அச்சிடல் தொழினுட்பத்திற்கான உயர் டிப்ளோமா மற்றும் முகாமைத்துவத்தில் சிறப்புத் தேர்வு மற்றும் வெள்ளி விருதுகளையும் பெற்றுள்ளார்.

    திரு. அமரதாசவின் பதவிக்காலத்தில், தமிழ் மற்றும் சிங்கள மொழியில் செய்தித்தாள்களை வரிசைப்படுத்துகின்ற ஒரு வகைப்படுத்தப்பட்ட விளம்பர அமைப்பினை ANCL அறிமுகப்படுத்தியது.  இது இலங்கையில் செய்தித்தாள்களை வரிசைப்படுத்துவதற்காக ஒரு வகைப்படுத்தப்பட்ட விளம்பர அமைப்பு முறைமையை அறிமுகப்படுத்திய முதல் சந்தர்ப்பமாகும்.

    ANCL செய்தித்தாள்கள் 1995 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 04 ஆம் திகதி லங்கா இணையத்தளத்தின் மூலம் டெய்லி நியூஸ் மற்றும் சன்டே ஒப்சேவர் ஆகியவற்றினை ஆன்லைனில் முதன்முதலில் பிரசுரித்தது. இது தெற்காசியாவில் செய்தித்தாள்களை ஆன்லைனில் பிரிசுரித்த முதல் சந்தர்ப்பமாகும். இதன் பின்னர் ANCL ஆனது தொடர்ச்சியாக செய்தித்தாள்களை ஆன்லைனில் பிரசுரித்தது. சிங்கள யுனிகோட் எழுத்துருவான தினமின ANCL இனால் உருவாக்கப்பட்டதுடன் அது ICTA மூலம் பயனாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

    மேலும் வாசிக்க…
  • திரு.சந்தன வீரசிங்க

    திரு. சந்தன வீரசிங்க அவர்கள் DMS எலக்ரோனிக்ஸ் (பிறைவெற்) லிமிடெட் நிறுவனத்தில் பணிப்பாளர்/பொது முகாமையாளராகப் பணியாற்றுகின்றார். இவர் நாலந்தா வித்தியாலயத்தின் பழைய மாணவராவார். சந்தன அவர்கள் மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் ஒரு இளநிலைப் பட்டப்படிப்பு மாணவனாக இருந்தபோது, கணினித் தொகுதிகளின் மீதான தனது முதல் ஆர்வத்தினை வெளிக்காட்டினார். அதிலிருந்து மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பிரிவில் முதல்-வகுப்பு ஹானர்ஸ் பட்டத்தினைப் பெற்றார். இவர் பட்டப்படிப்பின் பின்னர் தரவு நிர்வாக அமைப்புகள் (DMS) நிறுவனத்தில் ஒரு பொறியியலாளராக 1984 இல் இணைந்தார். அதன் பின்னர், DMS அந்நேரத்தில் பயன்படுத்திய வாங் மினி கணினித் தொகுதிகளைக் கையாளுவதில் திரு.சந்தன வீரசிங்க அவர்கள் ஈடுபட்டிருந்தார்.

    திரு. சந்தன வீரசிங்க அவர்கள் ஈடுபட்டிருந்த ஒரு முக்கியமான செயற்றிட்டமாக வாங் கணினித் தொகுதிகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளின் அறிமுகத்தினைக் குறிப்பிடலாம். அந்நேரத்தில் சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் கணினியைப் பயன்படுத்துவது ஒரு தேவையாக இருந்தது. சந்தனவும் அவரது குழுவும் வாங் உலகளாவிய குழுவுடன் இணைந்தனர். இந்தக் குழு வாங் கணினிகளில் ஆங்கிலம் தவிர பிற மொழிகளைச் சேர்ப்பதில் பணிபுரிந்தது. இந்த மேம்பாடு முக்கியமாக சொற் செயலாக்கத்திற்காக இருந்தது. இதன் தொகுப்பு இறுதி செய்யப்பட்டிருந்ததுடன் வெளியீடு செய்யப்படவுமிருந்தது. ஆனால் இது அறிவுசார் சொத்துரிமை தொடர்பான நீதிமன்ற வழக்கால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. இது தொடர்பில் சுமார் ஒரு வருடம் கழித்து, நீதிமன்றத்தில் தீர்வு காணப்பட்டது. பின்னர் தனிநபர் கணினிகளுக்கான சிங்கள மொழியிலான கணினிச் செய்முறையை DMS உருவாக்கியது. சிங்கள மொழியிலான ஒரு தொகுப்பாக “மௌவிமா” (මව් බිම) மற்றும் தமிழ் மொழியிலான ஒரு தொகுப்பு “தாய்மொழி” இனையும் DMS வெளியிட்டது.

    திரு. சந்தன வீரசிங்க அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் ஒரு வருகைதரு விரிவுரையாளராகத் தொடர்ச்சியாகப் பணியாற்றினார். மேலும் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழினுட்பப் பீடத்தினை உருவாக்கப் பணியாற்றிய குழுவிலும் இவர் இருந்தார். இவர் தகவல் தொழினுட்ப பீடத்தின் வெளிவாரி சபை உறுப்பினராக இருந்தார். திரு. சந்தன வீரசிங்க அவர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கணினி விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையின் ஒரு வருகைதரு விரிவுரையாளராகவும் தொடர்ச்சியாக ஈடுபட்டிருந்தார்.

    திரு. சந்தன வீரசிங்க இலங்கை கணினிச் சங்கத்தின் (CSSL) சிரேஷ்ட உறுப்பினராக உள்ளார். இவர் 1990களின் பிற்பகுதியில் இதில் இணைந்தார். இவர் 2003 ஆம் ஆண்டில் CSSL இன் தலைவராகப் பணியாற்றியுள்ளதுடன், அதன் துணைத்தலைவராக, செயலாளராக மற்றும் மாணவர் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

    2003 ஆம் ஆண்டில் இ-இலங்கை மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. மேலும், இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனமும் (ICTA) அமைக்கப்பட்டது. திரு. சந்தன வீரசிங்க CINTEC குழுமத்தின் முன்னாள் அலுவலர் உறுப்பினராக CINTEC இனை மூடும் செயல்பாட்டில் பங்கேற்றார். மேலும் ICTA இனை உருவாக்குவதற்கான கூட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

    திரு. சந்தன வீரசிங்க இலங்கை தரநிர்ணய நிறுவனத்தின் (SLSI) தகவல் தொழில்நுட்பத் துறைசார் உறுப்பினராகவும் இருந்தார். இந்தக் குழு உள்நாட்டு மற்றும் சர்வதேச தரத்திலான தரநிலைகளை உருவாக்குவதில் செயல்பட்டது. திரு. வீரசிங்க தொழில்துறைக்கான தரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். இறுதியாக, தகவல் தொழினுட்ப அரங்கில் இலங்கை நீண்ட தூரம் வந்துள்ளது என்று திரு. வீரசிங்க கூறுகிறார்.

    மேலும் வாசிக்க…
  • திரு.ஜெகத் ரணவக்க

    திரு. ஜெகத் ரணவக்க அவர்கள் கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வி கற்றுள்ளதுடன் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பௌதீக விஞ்ஞானப் பிரிவில் இளமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

    திரு. ஜெகத் ரணவக்க அவர்கள் தனது சொந்தக் கம்பனியான ஜெகத் ரொபாட்டிக்ஸ் பிறைவெற் லிமிட்டெட்டினை 1985 ஆம் ஆண்டு ஸ்தாபித்தார். இவர் 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், கணினி வன்பொருள் விற்பனை, உற்பத்தி மற்றும் மென்பொருள் மேம்பாடு ஆகியன உள்ளடங்கலாக நிறுவன முகாமைத்துவத்தில் முப்பது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தினைக் கொண்டிருக்கிறார்.

    இவர் மேம்படுத்தல், பரீட்சித்தல், நடைமுறைப்படுத்தல், ஆவணப்படுத்தல், தேவைகளை இனங்காணல், பகுப்பாய்வு & வடிவமைத்தல் மற்றும் R&D ஆகியன உள்ளடங்கலாக மென்பொருள் தீர்வு மேம்பாட்டில் நிபுணத்துவம் வாய்ந்தவராக முப்பது வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இவர் PLC நிரலாக்கம் (புரோகிராமிங்) உள்ளடங்கலாக இலத்திரனியல் சார்ந்த தொழிற்சாலைகளுக்கான தானியங்கி முறைமைகளை வடிவமைத்தலில் பல வருடங்கள் அனுபவமுள்ளவர். இவர் ரஸ்யா (வைத்தியசாலைகளுக்கு கணினி விநியோகித்தல்), கென்யா (ஹோட்டல் முகாமைத்துவ மென்பொருள்/ வன்பொருள் நிறுவுதல்) மற்றும் சிங்கப்பூர் (வன்பொருள், மென்பொருள்) ஆகிய வெளிநாடுகளில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்.

    திரு.ஜெகத் ரணவக்க அவர்கள் மென்பொருள் தொழில்துறைக்கான இலங்கை சங்கத்தின் (SLASI) ஸ்தாபக தலைவராவார் அத்துடன் மென்போருள் வடிவமைப்புத் துறையில் மேலும் பல சங்கங்களையும் இலங்கையில் உருவாக்கியுள்ளார். இவர் இலங்கை கணினிச் சமூகத்தின் சக உறுப்பினராவார்.

    மேலும் வாசிக்க…
  • திரு.ஜோன் என்.எல்.சி.பெர்னான்டோ

    திரு.ஜோன் என்.எல்.சி.பெர்னான்டோ கொழும்பு கொட்டஹேனவில் உள்ள சென்.பெனடிக்ட் கல்லூரியில் ஆரம்பக்கல்வியைக் கற்றார், அத்துடன் இலங்கை பேராதனை சிலோன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் பல்கலைக்கழக படிப்பினை பூர்த்தி செய்தார். இவர் 1967 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பொறியியல் மாணவனாகப் பயிலும் போது அனெலொக் கணினியைப் பயன்படுத்தி ஒரு அசைன்மெண்ட் இனை செய்யும் போது அவருக்கு கணினியில்  ஆர்வம் உண்டானது.

    இவர் 1979/80 காலப்பகுதியில் பெல்ஜியம் அரசாங்கத்தின் புலமைப்பரிசிலினூடாக தாய்லாந்து நாட்டின் ஆசியன் தொழினுட்ப நிறுவனத்தில் கணினியின் பயன்பாடுகள் மற்றும் முகாமைத்துவம் எனும் பிரிவில் முதுகலைமானிப் பட்டத்தினைப் பெற்றார். இவரது இறுதியாண்டு முதுகலைமானி ஆய்வினை “இலங்கையில் கணினி பயன்பாடுகளுக்கான வளங்கள் பற்றிய ஓர் ஆய்வு” எனும் தலைப்பில் முன்னெடுத்திருந்தார். இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் IBM உலக வர்த்தகக் கூட்டுத்தாபனம் ஆகியன இவரது கள வேலைகளுக்கான நிதியினை வழங்கின. திரு.பெர்னான்டோ தனது பட்டமளிப்பின் பின்னர் 1980 ஆம் ஆண்டு இலங்கை IBM இல்  இணைந்தார். இவர் 2012 ஆம் ஆண்டு வரை IBM இல் பணியாற்றியுள்ளதுடன், இந்தியா, கொங்கோங், சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் IBM ற்காக வெவ்வேறுபதவிகளில் 32 வருடங்கள் பணியாற்றியுள்ளதுடன், இறுதி நான்கு ஆண்டுகளில் IBM ஊழியர்களை உள்வாரியாகப் பயிற்றுவிப்பதற்காக உலகளாவிய ரீதியிலான ஒரு வளமாக கருதப்பட்டார்.

    1968 இலிருந்து இலங்கையில் ICL சிலோன் நிறுவனம் ICL கணினிகள்மற்றும் DMS வாங் (Wang) மினி கணினிகளையும் அதன் பின்னர் இலங்கை மற்றும் வெளிநாடுகளில் IBM கணினிகளை நிறுவ ஆரம்பித்ததமை வரையான இலங்கையின் கணினி வரலாற்றுடன் சமாந்தரமாக அவரது வாழ்க்கை இருந்ததாக திரு.பெர்னான்டோ அவர்கள் கூறுகின்றார். 

    திரு.பெர்னான்டோ அவர்கள் ஆரம்பத்தில் ஒரு கணினி பொறியியல் பயிலுனராக 1967 இலிருந்து 1973 வரை பணியாற்றினார். அதன் பின்னர் கணினி பொறியிலாளர், மற்றும் ICL சிலோன் நிறுவனத்தில் சிரேஸ்ட கணினி பொறியியலாளராகவும் அதன் பின்னர் 1973 முதல் 1976 வரையான காலப்பகுதியில் இந்தோனேசியாவில் ICL சிலோன் நிறுவனத்தில் கணினி பொறியியல் முகாமையாளராகவும் பணியாற்றிள்ளார். பின்னர், இலங்கை IBM உலக வர்த்தக கூட்டுத்தாபனத்தில் கணக்காளர் பயிலுனர் பிரதிநிதியகவும் (சொலுஸன்ஸ் ஆர்கிடெக்); 1980 முதல் 1985 வரையான காலப்பகுதியில் சந்தைப்படுத்தல் முகாமையாளராகவும், 1988 முதல் 1990 வரையான காலப்பகுதியில் வாடிக்கையாளர் செயற்பாட்டு முகாமையாளராகவும், 1995 முதல் 1998 வரையான காலப்பகுதியில் நாட்டிற்கான பொது முகாமையாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் 1986 முதல் 1988 வரையான காலப்பகுதியில் IBM தென்கிழக்காசிய பிராந்தியத்திற்கான வணிக திட்டமிடல் முகாமையாளருக்கான செயற்பாடுகளை உள்ளடக்கி இலங்கைக்கு பொறுப்பாக வெளிநாட்டு வேலைகளை முன்னெடுத்ததுடன், 1993 முதல் 1995 வரையான காலப்பகுதியில் IBM ASEAN – AS/400 ற்கு வியாபார குறி முகாமையாளரகவும், 1998 முதல் 2008 வரையான காலப்பகுதியில் IBM ஆசிய பசுபிக் தெற்குக்கான பிராண்ட் வழக்கறிஞராகவும் மற்றும் IBM Worldwide- 2009 முதல் 2012 வரையான காலப்பகுதியில் விற்பனை கற்கைக்கு உதவுவராகவும் பணியாற்றியுள்ளார்.

    இவர் 2004 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தகவல் தொழினுட்ப நிறுவனத்தில் (SLIIT) IT பிரிவில் முதுமானிப் பட்டப்படிப்பு கற்கைகளுக்கு வருகைதரு விரிவுரையாளராகப் பணியாற்றி வருகின்றார். இவர் இலங்கை கணினிச் சமூகத்தின் ஸ்தாபக பணிப்பாளராகவும் அதன் பேரவையின் முன்னாள் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் தொழில் ரீதியாக ஒரு பட்டயப் பொறியியலாளர் ஆவார். இவர் கணினிச் சமூகம் மற்றும் சிங்கப்பூர் இன்சிடியூட் ஒஃப் ஆவிரேற்றஸ் ஆகியவற்றின் சக உறுப்பினரும் ஆவார். இவர் ACS ஆல் சான்றிதலளிக்கப்பட்ட SFIA IT திறன்கள் மதிப்பீட்டாளர் ஆவார். இவர் 08 நாடுகளில் தங்கி பணிபுரிந்தமையால் அவரை ஒரு உலக குடிமகனாகக் கருதுகின்றார்.

    மேலும் வாசிக்க…
  • திரு. லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி

    திரு. லக்ஷ்மன் ஹெட்டியாராச்சி அவர்கள் ஒரு பட்டயக் கணக்காளராக இருக்கிறார், பிரிட்டிஸ் கணினிச் சமூகத்தின் உறுப்பினர் மற்றும் IBM இல் நிதி மற்றும் நிர்வாக முகாமையாளராக 1979 ஆம் ஆண்டு இணைந்தார் அத்துடன் கணக்கியல் மற்றும் பாதீடுகளில் பங்கேற்றுள்ளார், மேலும் இவர் ஒரு வழக்கறிஞர் ஆவார். இவர் பின்னர் சந்தைப்படுத்தல் பிரிவில் இணைந்ததுடன் அதனைத் தொடர்ந்து இலங்கை IBM இல் நாட்டு முகாமையாளரானார்.

     

     

     

  • திரு.லால் சந்திரநாத்

    திரு. லால் சந்திரநாத் DMS எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் மற்றும் DMS சாப்ட்வேர் டெக்னாலஜீஸ் இன் முன்னாள் நிர்வாகப் பணிப்பாளர் ஆவார். 1978 ஆம் ஆண்டில் டேட்டா மேனேஜ்மென்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் (DMS) இன் ஸ்தாபகக் குழுவில் உறுப்பினராக இருந்த அவர், ஜூன் 2017 வரை அதன் பணிப்பாளராகப் பணியாற்றினார். 1981 ஆம் ஆண்டில் DMS எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஸ்தாபகக் குழு உறுப்பினராகவும் இருந்தார். அங்கு அவர் ஜூன் 2017 வரை பணிப்பாளராகப் பணியாற்றினார். பின்னர் 2014 ஆம் ஆண்டில், DMS சாப்ட்வேர் டெக்னாலஜிஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் பணிப்பாளர் / பொது முகாமையாளராக திரு. சந்திரநாத் நியமிக்கப்பட்டார், மேலும் Oracle கோர்ப்பரேஷனுடன் வணிக ஒப்பந்தங்களை பேச்சுவார்த்தை நடத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். திரு. சந்திரநாத் ICT துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளார் அத்துடன் பொறியியல், வாடிக்கையாளர் ஆதரவு, மென்பொருள் மேம்பாடு, விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் மற்றும் மேலாண்மை மற்றும் தலைமைத்துவம் போன்ற தகவல் தொழில்நுட்ப துறைகளில் அனுபவம் பெற்றவர்.

    திரு. சந்திரநாத் இலங்கை ICT நிறுவனத்திற்கு (ICTA) முன்னர் ICT இல் உயர் தீர்மானங்களை மேற்கொண்ட நிறுவனமான தகவல் தொழில்நுட்ப பேரவையில் (CINTEC) 1992-1996 & 1999-2000 வரையான காலப்பகுதியில் கவுன்சில் உறுப்பினராக இருந்தார். திரு. சந்திரநாத் CINTEC இன் தேசிய தகவல் ஒலிம்பியாட் குழுவின் தலைவராக இருந்தார். இவர் இலங்கை கணினிச் சங்கத்தின் உறுப்பினராகவும், தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ஆசிய மற்றும் சர்வதேச மென்பொருள் போட்டிகளில் பங்கேற்கும் இலங்கை மாணவர் அணிகளுக்கு பயிற்சி அளித்துள்ளார். இதன் விளைவாக இலங்கைக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் கிடைத்தன.

    திரு. சந்திரநாத் கண்டியின் கிங்ஸ்வுட் கல்லூரி மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றார். அங்கு அவருக்கு மின் மற்றும் மின்னணுப் பொறியியல் துறையில் விஞ்ஞான இளமானிப் (ஹான்ஸ்) பட்டம் வழங்கப்பட்டது. இவர், பிலிப்பைன்ஸில் உள்ள முகாமைத்துவத்திற்கன ஆசிய நிறுவகத்தில், பொது நிர்வாகத்தில் முதுகலைக் கற்கையினையும் பின்பற்றியுள்ளார்.

    மேலும் வாசிக்க…
  • திரு. நிரஞ்சன் டி சில்வா

    திரு. நிரஞ்சன் டி சில்வா அவர்கள் மெற்றோபொலிட்டன் கணினிகள் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். திரு. நிரஞ்சன் டி சில்வா தனது முதல் பட்டப்படிப்பினை மின்னணுப் பொறியியல் துறையில் ஜக்கிய இராச்சியத்திலிருந்து பெற்றுக் கொண்டார். இவர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முதுகலை முகாமை நிறுவனத்திலிருந்து (PIM) ஒரு MBA பட்டத்தினைப் பெற்றார். நிரஞ்சன் மெற்றோபொலிட்டன் குழுவில் 1981 ஆம் ஆண்டு ஒரு பொறியியலாளராக இணைந்தார்.

    நிரஞ்சன் மெற்றோபொலிட்டனில் சேர்ந்தபோது, வங்கி உபகரணங்களில் ஏகபோக விநியோகஸ்தராக மெட்ரோபொலிட்டன் காணப்பட்டது. உதாரணமாக லெட்ஜர் அட்டைகள் மற்றும் அச்சுப்பொறிகள் ஆகியவற்றைக் கூறலாம். 1982 ஆம் ஆண்டு, இலங்கை வங்கி தமது வங்கி நடவடிக்கைகளை தன்னியக்கமாக்கத் தீர்மானித்தது. 1983 இன் முற்பகுதியில், லெட்ஜர் அட்டைகள் அச்சுப்பொறியுடன் ஒரு கணினி வழங்குமாறு இலங்கை வங்கி கேள்வி அறிவித்தல் விடுத்தது. இதற்கு ஒரு Fujitsu லெட்ஜர் அட்டை அச்சுப்பொறியுடன் ஒரு Canon AS-100 கணினியை மெற்றோபொலிட்டன் வழங்க முன்வந்தது.  திரு. நிரஞ்சன் டி சில்வாவும் அவரது குழுவினரும் மெற்றோபொலிட்டனிற்காக இந்த விலைமனுக்கோரலை வென்றனர். இருப்பினும் அவர்கள் அளிக்கும் தீர்வை நிரூபிக்க அவர்களுக்கு ஒரு வார அறிவிப்பு மட்டுமே, இலங்கை வங்கியினால் வழங்கப்பட்டது. இது ஒரு ஆரம்ப திருப்புமுனையாகும், இது இலங்கை வங்கி  மற்றும் பிற வங்கிகளை கணினிமயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமாகும்.

    திரு. நிரஞ்சன் டி சில்வா தொடங்கிய மற்றொரு சவாலான திட்டம் மின்சாரப் பட்டியலிடல் குறித்த “இணையத்துடனான கட்டணச்சீட்டிடும் முறைமை” ஆகும். இந்தத் திட்டத்தின் மூலம், லங்கா மின்சார கம்பெனி பிரைவேட் லிமிடெட் (LECO) இன் நுகர்வோருக்கு மின்சாரக் கட்டணச்சீட்டு வழங்கப்பட்ட செயல்முறை மாற்றியமைக்கப்பட்டது, இதனால் பில் தபால் மூலம்  அனுப்பப்படுவதற்கு பதிலாக, மின்மானி வாசிப்பாளர் நுகர்வோர் வீட்டிற்கு செல்வதன் மூலம்,  நுகர்வோருக்கு மின்கட்டணச்சீட்டு கிடைத்தது,  இது முன்னர் பின்பற்றப்பட்ட செயன்முறையாக இருந்தது. திரு. நிரஞ்சன் டி சில்வாவும் அவரது குழுவினரும் மெற்றோபொலிட்டனிற்காக இந்த விலைமனுக்கோரலை வென்றனர்.

    திரு. நிரஞ்சன் டி சில்வா இலங்கை கணினிச் சமூகத்தின் (CSSL) செயலாளராகவும் இருந்துள்ளார். அவர் இலங்கை கணினிச் சமூகத்தின் பொருளாளராகவும், துணைத் தலைவராகவும் மேலும் அதன் தலைவராகவும் இருந்தார். CSSL இன் கீழ், நிரஞ்சன் ஈடுபட்டிருந்த மிகவும் சவாலான பணிகளில் ஒன்று, 1995 இல் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய கணினிக் கூட்டமைப்பை (SEARCC) ஏற்பாடு செய்தது ஆகும்.

    திரு. நிரஞ்சன் டி சில்வா, மெற்றோபொலிட்டன் குழுவில் அங்கம் வகித்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறுகிறார். ஏனெனில், இது புதிய தொழில்நுட்பம் மற்றும் புதிய தீர்வுகளில் கவனம் செலுத்திய நிறுவனமாக இருந்தது. நிரஞ்சன் தற்போது “ஆடம் இன்னோவேஷன்ஸ்” என்ற ஜப்பானிய நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார், மேலும் ஜப்பானில் முதல் சர்வதேச IT பூங்காவை அமைத்துள்ளார். அங்கு ஒரு சில இலங்கை நிறுவனங்கள் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. 

    மேலும் வாசிக்க…
  • திரு.யாஸா ருணாரெத்ன

    திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றார். இவர் 1967 ஆம் ஆண்டு சிலோன் பல்கலைக்கழகத்தில் B.Sc. (Honors) பட்டத்தினைப் பெற்றார் அத்துடன் அங்கு பௌதீகவியல் மற்றும் கணிதத்துறைகளில் இரு வருடங்கள் சேவையாற்றியுள்ளார். பின்னர் இலங்கையில் முதன் முதலில் கணினி நிறுவப்பட்ட அரச சேவை நிறுவனமான அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தில் இணைந்து கொண்டார், அத்துடன் அங்குதான் அவர் கணினி செய்முறையில் தனது தொழிலை தொடங்கினார்.

    திரு.கருணாரெத்ன அவர்கள் சனத்தொகை மதிப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் 1970 ஆம் ஆண்டு இணைந்தார். அங்கு 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற சனத்தொகை மதிப்பீட்டுத் திட்டத்தினை முன்னெடுக்கும் முழுப்பொறுப்பினையும் வகித்தார். 1972 ஆம் ஆண்டு பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் சிஸ்டம் அனேலிஸ்ட் ஆக இணைந்தார் பின்னர் அவ் நிறுவனத்தினது தரவு செயல்முறை முகாமையாளராக நியமிக்கப்பட்டார். 1979 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலோரடா பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கற்கைக்கான ஜக்கிய நாடுகள் ஃபெல்லோஷிப்பினைப் பெற்றதுடன் அங்கு 1980 ஆம் ஆண்டு கணினி விஞ்ஞானத்தில் முதுமானிக் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார். அங்கே இருக்கும் போது, அமெரிக்க விவசாயத்துறையின் ஒரு ஆலோசனை திட்டமான வீதி வடிவமைப்பு முறைமையினை டிஜிட்டல் ஒருமைப்பாடு ஆக்குவதற்கான திட்டத்தில் ஒரு தகவல் நிபுணராக பணியாற்றினார். இவர் 1981 ஆம் ஆண்டு பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திற்கு திரும்பியதுடன் 1983 ஆம் ஆண்டு ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் (ETF) சபையில் இணைந்தார், அங்கு 2001 ஆம் ஆண்டு வரை கணினி சேவைகைளுக்கான பிரதி பொது முகாமையாளராகப் பணியாற்றினார். ETF சபையில் அவரது நியமனம் அவரை பல நிறுவனங்களில் ஆலோசகராக பணியாற்ற அனுமதித்தது. அத்துடன் இலங்கை வங்கியில் முதல் நடைமுறைக் கணக்கு முறைமையின் ஆலோசகராக இருந்தார். இவர் இலங்கை மற்றும் பல சர்வதேச நிறுவனங்களில் மற்றும் பல அரச முகவர்களிடமும் மரியாதைக்குரிய ஆலோசகராக இருந்தார். இவர் 1984 ஆம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் தேசிய ஆலோசகராக இருந்தார். இவர் தகவல் தொழினுட்ப அபிவிருத்திக்கு பல பிரிவுகளில் பங்களிப்புச் செய்துள்ளார்.

    திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் 1976 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை கணினிச் சமூகத்தின் (CSSL) முக்கிய பிரதிநிதிகளில் ஒருவராக மற்றும் ஒரு முன்னோடியாக இருந்தார். இவர் CSSL இன் பேரவையில் மூன்று தசாப்தங்களாகச் வேவையாற்றியுள்ளார். 1991 ஆம் ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டு வரை CSSL இன் தலைவராகப் பணியாற்றினார். இவர் தலைவராகப் பணியாற்றிய காலத்தில் பல இலக்குகளை வெற்றிகண்டார். அவற்றில், இலங்கைப் பாடசாலை மாணவர்களை வெளிநாடுகளில் நடைபெற்ற மென்பொருள் போட்டிகளுக்கு அனுப்பியமை ஒரு புதுமையான துணிகரச் செயலாகக் கருதப்படுகின்றது. பல தடைகளைக் கடந்து, 1990 இல் இந்த யோசனையை செயற்பாடாக முன்னெடுத்தார். அவரது இத்துணிகர முயற்சியின் காரணமாக 1995 ஆம் ஆண்டு சர்வதேச மென்பொருள் போட்டியில் இப்பிராந்தியத்தின் பல நாடுகளுடன் போட்டியிட்டு வெற்றியீட்டிய இலங்கைக் குழுவினர் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டனர். CSSL க்கான அரச கலைக் கட்டிடத்தினை பாதுகாத்தது அவரடைந்த இன்னுமொரு இலக்காகும், இது முன்னர் OPA (நிபுணத்துவ சங்கங்கள் அமைப்பு) கட்டிடத்தில் ஒரு அறையில் செயற்பட்டு வந்தது, இதற்காக தனி ஒருவராகத் திட்டமிட்டு அதற்கு முன்னோடியாகவும் செயற்பட்டிருந்தார்.

    CSSL ற்கு ஆற்றிய சேவையை அங்கீகரிப்பதற்காக திரு. கருணாரெத்ன அவர்கட்கு CSSL இன் புகழ்மிக்க மரியாதைக்குரிய உறுப்பினர் என 2001 ஆம் ஆண்டு விருது வழங்கப்பட்டது. திரு. கருணாரெத்ன அவர்கள் 1989 ஆம் ஆண்டிலிருந்து OPA இல் கணினி விஞ்ஞானத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராக இருக்கின்றார்.

    1992 ஆம் ஆண்டு, கெளரவ ரணில் விக்ரமசிங்க அவர்கள் இன்போரெல் 1992 மாநாடு மற்றும் கண்காட்சியினை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுமாறு திரு.கருணாரெத்ன அவர்கட்கு அழைப்பு விடுத்தார். அதற்கான பிரதான ஒழுங்கமைப்புக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டதுடன் இன்போரெல் மாநாட்டிற்கு தலைவராகவும் நியமிக்கப்ட்டார். அது ஒரு வெற்றிகரமான மாநாடாக இருந்தது.

    CSSL இல் திரு.கருணாரெத்ன அவர்கள் தலைவராக இருந்த காலத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வுகளில் இலங்கையின் முதல் சர்வதேச IT மாநாடு – SEARCC’95 இன் தென் கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பு ஆனது மிகவும் முக்கியமானதாகும்.  SEARCC’95 ஒழுங்கமைப்புக் குழுவில் தலைவராக திரு.கருணாரெத்ன அவர்கள் செயற்பட்டது இலங்கையின் புகழை சர்வதேசத்திற்குக் கொண்டு செல்ல வழியமைத்தது. தென்கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பில் அங்கம் வகித்த 13 ஆசிய பசுபிக் நாடுகளில் அதன் தலைமைத்துவத்தினைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமை திரு.கருணாரெத்ன அவர்களுக்கு கிடைத்தது.

    2002 ஆம் ஆண்டில் தென்கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவிக்கு திரு.கருணாரெத்ன அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதிவியிலிருந்து கொண்டு செயலகத்தினை இயக்குவதற்கும் மற்றும் பல்வேறு நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாகவிருந்தார். திரு.கருணாரெத்ன அவர்கள் தகவல் செயலாக்கத்திற்கான சர்வதேச கூட்டமைப்பில் (IFIP) SEARCC இனைப் பிரதிநிதித்துவப்படுத்துபவராக இருந்தார்.  இவ் நாடுகளில் நடைபெற்ற நிகழ்வுகளில் பங்குபற்றியதன் காரணமாக பல சிறந்த தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை இலங்கையில் நடைபெற்ற மாநாடுகளுக்கு மற்றும் இலங்கையிலுள்ள நிபுணர்கள் பயனடைவதற்காக பல செயலமர்வுகளை நடாத்துவதற்கு அவர்களுக்கு அழைப்பு விடுவதற்கான சாத்தியம் ஏற்பட்டது. இப் பிராந்தியத்திற்கு திரு.யாஸா கருணாரெத்ன அவர்கள் வழங்கிய அளப்பெரும் பங்களிப்பிளை அங்கீகரிப்பதற்காக அவருக்கு “தென்கிழக்காசியப் பிராந்திய கணினி கூட்டமைப்பின் மதிப்பிற்குரிய உறுப்பினர்” எனும் விருது வழங்கப்பட்டது. இவ் மதிப்புக்குரிய விருது பெற்ற ஒரே நபர் இவராவார்.

    2013 ஆம் ஆண்டு நிபுணத்துவ சங்கங்கள் அமைப்பு நடத்திய விஞ்ஞானம் மற்றும் தொழினுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான தேசிய உயரிய விருதினைப் பெற்றார்.

    திரு.கருணாரெத்ன அவர்கள் இலங்கையில் ICT கொள்கையில் உயர் தீர்மானங்களை எடுக்கும் முன்னைய கட்டமைப்பான தகவல் தொழினுட்பப் பேரவையில் (CINTEC) 1993 ஆம் ஆண்டிலிருந்து 1999 வரை உறுப்பினராக இருந்தார். இவர் இலங்கையின் ICT தொழில்துறை, தொலைத் தொடர்பாடல் வழங்குனர்கள் மற்றும் இணையத்தள சேவை வழங்குனர்களைப் பிரதிநிதித்துவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட இலங்கைத் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழினுட்ப சங்கத்தின் (SLICTA) ஆரம்பத் தலைவராக இருந்தார்.

    எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு, கார் உற்பத்தி தொழிற்சாலைகள் போன்ற பல தொழிற்துறைகளில் மனித ஊழியர்களுக்குப் பதிலாக தொழினுட்பம் மற்றும் ரோபோக்கள் பதிலீடு செய்யப்படும் என திரு.கருணாரெத்ன அவர்கள் கூறுகின்றார். எனவே, இந்த உலகத்தை ஒரு சிறந்த இடமாக மாற்றுவதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் ஆராய்வது நிபுணர்களுக்கான சவாலாக அமைந்தது.

    மேலும் வாசிக்க…
  • கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் தரவு வங்கி

    கைத்தொழில் கூட்டுத்தாபனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனைகளின் போக்குகளை கண்காணிப்பதற்காக கைத்தொழில் அமைச்சின் கீழ் கணனியை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறைமையை ஸ்தாபிப்பதற்கான திட்டங்கள் 1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உருவாக்கப்பட்டன. வன்பொருள், இரும்புக் கூட்டுத்தாபனம், மட்பாண்டங்கள், காகிதம், டயர், எண்ணெய் வகைகள், கொழுப்புகள் மற்றும் தாது மணல் கூட்டுத்தாபனம் போன்ற இருபது பொதுக் கூட்டுத்தாபனங்கள் இவ்அமைச்சின் கீழ் காணப்பட்டன, அத்துடன் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக மாதமொருமுறை மதிப்பாய்வு செய்யப்பட்டது.

    மேலும் வாசிக்க…