திரு.ஜெயந்த பெர்னான்டோ

ஜெயந்த பெர்னான்டோ அவர்கள் இலங்கையில் ICT சட்டத்தினை சீர்திருத்துவதற்கு 20 ஆண்டுக்கு மேல் முன்னோடியாகச் செயற்பட்ட ஓர் சட்டத்தரணியாவார். இவர் IT மற்றும் தொடர்பாடல் சட்டப்பிரிவில் (லண்டன் பல்கலைக்கழகத்தில்) விசேட முதுமானிப் பட்டத்தினைப் பெற்றுள்ளதுடன், தெற்காசியாவிலேயே முதன் முதலாக “ஜ.நா மின்னணு தொடர்பாடல்கள் உடன்படிக்கை” இல் இணைவதற்கும், “பூடபெஸ்ட் இணையக் குற்ற உடன்படிக்கை” இல் இலங்கையை இணைத்துக் கொள்வதற்காகவும் முன்னின்று செயலாற்றினார்.

இவரது ICT சட்ட நிபுணத்துவமானது பரந்த தலைப்புக்களை உள்ளடக்குகின்றது, அவற்றில் தகவல் தொழில்நுட்பபாதுகாப்பு அல்லது இணையவழிக் குற்றம் (இணையம் சார்ந்த குற்றங்கள்), அறிவுசார் சொத்து உரிமைகள் மற்றும் மென்பொருள் உரிமம், மின்னணு பரிமாற்றங்கள் மற்றும் கையடக்க வங்கிச் சேவை, தனியுரிமை, இணைய ஆளுமை மற்றும் பெரிய IT முறைமைகளை ஒப்பந்தமிடல் அல்லது வரைதல் ஆகியவற்றினைக் குறிப்பிடலாம். இவர் பல நாடுகளில் ICT சட்டம் மற்றும் கொள்கை சீர்திருத்தங்களில் பரந்த அளவில சேவையாற்றிய அனுபவம் கொண்டவர் அத்துடன் ஜரோப்பிய பேரவை மற்றும் UNCITRAL ஆகியவற்றில் நிபுணராகச் சேவையாற்றியுள்ளார். இவரது ஓய்வு நேரங்களில் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடம், இலங்கை சட்டக் கல்லூரி மற்றும் பல பல்கலைக்கழகங்களிலும் வருகைதரு விரிவுரையாளராக பணியாற்றியுள்ளார்.

தேசிய சைபர் செக்யூரிட்டி ஏஜென்சி (இலங்கை CERT) உட்பட பல வாரியங்களில் பணியாற்றுகிறார். அவர் முன்பு LK டொமைன் ரெஜிஸ்ட்ரியின் (.LK) வாரியத் தலைவராக பணியாற்றினார். கூடுதலாக, அவர் இலங்கை ICT ஏஜென்சியின் (ICTA) பொது ஆலோசகராகவும், தலைமை சட்ட அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.

இவ் இணைய ஆளுமையுள்ள அரங்கத்தில், ICANN இன் அரசாங்க ஆலோசகர் குழுவின் (GAC), துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முதல் தெற்காசிய மனிதர் என்பது சிறப்பானது, மேலும் ICANN இன் நியமனக் குழுவின் துணை தலைவராகவும் (2005-07) சேவையாற்றியுள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்ட்ராஸ்பர்க் இலுள்ள ஜரோப்பியப் பேரவையின் இணையவழி குற்ற கமிஷன் கமிட்டியின் உலகளாவிய செயலகத்தின் (T-CY) ஒன்பது பேர் கொண்ட குழுவில் தெரிவு செய்யப்பட்ட முதல் தென்கிழக்காசிய மனிதர் எனும் பெருமையைப் பெற்றார். T-CY ஆனது உலகளாவிய ரீதியில் பூடபெஸ்ட் இணையவழி குற்ற உடன்படிக்கையை நிர்வகித்தது.

திரு.ஜெயந்த பெர்னான்டோ அவர்கள் இங்கிலாந்து அரசாங்கத்தின் பிரிட்டிஷ் செவெனிங் ஸ்கோலர் ஆவார் (2002). அத்துடன் அமெரிக்காவின் ஐசனோவர் சக உறுப்பினருமாவார்.

சுருக்கமான காணொளி

முழுமையான காணொளி

 

ஜெயந்த பெர்னான்டோ அவர்கள் சட்டம் மற்றும் ICT பிரிவுகளில் பல இலக்குகளை அடைந்துள்ளதுடன் இவர் இப்பிரிவுகளில் உள்வாங்கப்பட்டது ஒரு தற்செயலான நிகழ்வாகும். இவர் 1995 ஆம் ஆண்டு இலங்கை மேல் நீதிமன்ற சிரேஷ்ட நீதிபதியாகப் பதவியாற்றிய மேன்மைதகு நீதிபதி மார்க் பெர்னான்டோ அவர்களிடம் நீதித்துறையில் பயிற்சி பெற்றுக் கொண்டிந்தபோது அவர் அடிக்கடி கூறிய வார்த்தையான புது வரவுகள் நீதித் துறையினுள் புதிய பகுதிகளாக உள்நுழைய வேண்டும் என்பதற்கிணங்க ஜெயந்த அவர்கள் புதிய வாய்ப்புக்களை நாடினார். இலங்கை கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பப் பேரவையில் (CINTEC)- ஆராய்ச்சி உதவியாளர்களுக்கான வெற்றிடம் இருப்பதாக இவருக்கு அறிவிக்கப்பட்டது – இது பின்னாளில் தகவல் தொழில்நுட்பப் பேரவையாக பெயர் மாற்றப்பட்டது. CINTEC இன் இக் குறிப்பிட்ட செயற்திட்டத்தில் கணினி குற்றங்கள் தொடர்பான சட்டத்திற்கான முன்மொழிவுகளை வடிவமைக்கும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டது; அங்கு சட்டத்திலுள்ள இடைவெளிகளை இனங்காணவும் கணினி குற்றங்கள் தொடர்பாக புதிதான சட்டத்தினை இயற்றுவதற்கும் தேவையிருந்தது. ஜெயந்த அவர்கட்கு சட்டமா அதிபர் திணைக்களத்த்தில் கடமையாற்றிய திரு.யசந்த கோடாகொட அவர்களிடம் அறிமுகம் கிடைத்ததுடன் அவரின் மூலம் திரு.கோலித்த தர்மவர்த்தன அவர்களிடம் அறிமுகம் கிடைத்தது. திரு.கோலித்த அவர்கள் ஜெயந்த அவர்கட்கு ஆலோசகராக இருந்ததுடன் வாழ்நாள் முழுவதும் அவரைத் தனது உத்வேகமாக கொண்டிருந்தார்.

CINTEC இன் மூலம் செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதன் செயற்பாட்டுக் குழுவினது அதிகாரம் முக்கியமாக இருந்தமையை திரு.ஜெயந்த அவர்கள் இனங்கண்டார். CINTEC இன் சட்டம் மற்றும் கணினிகள் குழுவானது (சட்டக் குழு) 1986 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. 1986 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நிகழ்ந்த அதன் முதலாவது கூட்டத்தின் போது குழுவினது கோட்பாடு உருவாக்கம் பற்றி ஆலோசிக்கப்பட்டது: “…… இன்னும் சில ஆண்டுகளில் கணினி தொழில்நுட்பம் தொடர்பான பிரச்சினைகள் மிகப் பெரிய சட்டப் பிரச்சினையாகிவிடும். இந்தக் குழுவினை உருவாக்குவதற்கான பிரதான நோக்கம் நாட்டின் சட்ட முறைமையினுள் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பொருத்தமான நடவடிக்கைகளை உள்வாங்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல் ஆகும், அதன் மூலம் அதன் பரந்த பயன்பாட்டினையும் அபிவிருத்தியினையும் தரமுயர்த்த முடியும்”.

அந்த செயற்பாட்டுக் குழுவில் உள்ளடக்கபட்டவர்களின் விபரம் பின்வருமாறு: தேசிய அறிவுசார் சொத்து அலுவலகத்திலிருந்து கலாநிதி டி.எம்.கருணாரெத்ன, சொலிசிட்டர் ஜெனரல் திரு.உபவன்ச யாபா, நீதி அமைச்சின் செயலாளர்களான திரு.பி.வி.கேரத் மற்றும் செல்வி தாரா விஜயதிலக , சட்ட பீடத்துக்கான பீடாதிபதி கலாநிதி சிரானி பண்டாரநாயக்க, சட்ட வரைஞர்களான திரு.நலின் அபேயசேகர மற்றும் செல்விதிரேஸ் பெரேரா, வங்கிப் பிரிவிலிருந்து பிரதிநிதிகள் திரு.கோலித தர்மவர்தன, திரு. லால் டயஸ், பங்கு மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் பங்குச் சந்தையிலும் இருந்து திரு.கே.கனகீஸ்வரன், PC ஆகியோர்.பொது வழக்கறிஞ்சர் திரு.சுனில் டி சில்வா அவர்கள் சில வேளைகளில் கூட்டங்களில் கலந்து கொள்வார். அக்குழுவில் ஒரு சட்ட நிபுணர் அல்லாத நபராக பேராசிரியர் சமரனாயக்க அவர்கள் தலைமை தாங்கினார். அந்தக் குழுவினால் அந்தக் காலப்பகுதியில் சட்டமியற்றுதலுக்கான இறுதிக்கட்டத்தில் இருந்தமையினால் 1995 ஆம் ஆண்டு ஆதாரச் சட்ட இலக்கம் 14 (விசேட விதிகள்) உருவானது. இது ஓரு முக்கியமான சட்டமாகும், அதன் மூலம் ஒலி ஔ பதிவுகளை ஏற்றுக்கொள்வது மற்றும் கணினியால் உருவாக்கப்பட்ட அறிக்கைகளிலுள்ள தகவல்கள், நீதிமன்றத்தில் உள்ள சிவில் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் ஆகியவை கையாளப்பட்டன.

இதனால் திரு.ஜெயந்த அவர்கள் 1995 ஆம் ஆண்டு CINTEC குழுவினது சட்டம் மற்றும் கணினிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அங்கு செயற்பாட்டுக் குழுவினது பணிகள், அக்குழுவினது பங்கு மற்றும் அப் பணிகளால் வரக்கூடிய பாதிப்புக்கள் பற்றியும் விளக்கமளித்தார். அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள்: அறிவுசார் சொத்து உரிமைகள், தெளிவான பிரச்சினைகள், கணினிக் குற்றங்கள் சார்பான பிரச்சினைகள், தரவுப் பரிமாற்றம் சார்பான பிரச்சினைகள், தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆகியவற்றினை உள்ளடக்கியிருந்தது. அத்துடன் அந்தக் கூட்டத்தின் போது திரு.ஜெயந்த அவர்கள் தான் சிறந்த வாழ்க்கை பாதையினை தேர்ந்தெடுத்துள்ளதனை உணர்ந்தார்.

ஆரம்பத்தில், திரு.ஜெயந்த அவர்கள் திரு.கோலித்த அவர்களின் கீழ் கணினி தொடர்பான குற்றங்கள் சார்பான ஒரு ஆய்வினை மேற்கொண்டார், அதாவது கணினி மூலமும் மற்றும் கணினியுடன் உருவாக்கப்படும் அச்சுறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை கையாள்வதற்கு தற்போதுள்ள குற்றவியல் சட்டம் பொருத்தமானதா என ஆய்ந்தறிவது அவரது நோக்கமாகும். மேலும் அக் குழுவானது அதன் பின்னணிச் செயற்பாடாக இ-வணிகம் மற்றும் இ- பரிமாற்றங்களுக்கான சட்டமியற்றுவதற்கான வேலைகளை முன்னெடுத்தது. மேலும் WTO மற்றும் TRIPS ஒப்பந்தங்களின் கீழ் இலங்கையின் ஈடுபாடுகளை எதிர்கொள்வதற்காக சட்டக் குழுவானது அதன் உள்ளீடுகளை தேசிய அறிவுசார் சொத்து அலுவலகத்திற்கான IPR சட்ட இலக்கம் 36 ற்கு 2003 ஆம் ஆண்டில் வழங்கியது. புதிய சட்டத்தில் மென்பொருள் மற்றும் ஒருங்கிணைந்த சுற்றுக்களைப் பாதுகாப்பதற்கான விதிகளை இலங்கையால் உள்ளடக்க முடிந்தது.

1984 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கணினி மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்ட இலக்கம் 10 ஆனது 1994 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் சட்ட இலக்கம் 11 இனால் 1999 ஆம் ஆண்டு பதிலீடு செய்யப்பட்டது, ஆனால் சட்டக்குழுவானது 2003 ஆம் ஆண்டில் CINTEC மூடப்படும் வரை செயலாற்றியது.

இலங்கை தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) 2003 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது, பின்னர் CINTEC னது அனைத்து செயற்பாடுகளையும் ICTA பொறுப்பேற்றுக் கொண்டது.

CINTEC இனது செயற்பாடுகளை ICTA பொறுப்பேற்றுக் கொண்டது இன்றியமையாததாக இருந்தது அத்துடன் சட்டம் மற்றும் கணினிகள் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட வேலைகளை தொடர வேண்டும் என இனங்காணப்பட்டது. இப்பகுதி ICTA னால் இ-சட்டங்கள் எனக் கூறப்பட்டது. இது ICTA வினால் இ-இலங்கை அபிவிருத்தித் திட்டத்தின் (eSL) கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட பிரதான நிகழ்ச்சித் திட்டமாகும்.

eSL ஆனது ICTAவின் தர அடையாளமாகக் காணப்பட்டது. இது பல்வேறு பங்குதாரர்களின் தேவைகளை நிறைவேற்றும், பல்நன்கொடை நிகழ்ச்சித் திட்டமாகும், அத்துடன் இ-சட்டங்கள் மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் மேற்கொள்வதனை பிரதானமாக முன்னிலைப்படுத்தப்பட்ட பகுதிகளாக இனங்கண்டது. CINTEC னது சட்டம் மற்றும் கணினிகள் குழு முன்னெடுத்த செயற்பாடுகள் அனைத்தையும் தொடர்வதற்காக பின்னர் தலைவராக இருந்தவரும் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியும் அழைப்பு விடுத்தனர். அதனைத் தொடர்ந்து திரு.ஜெயந்த அவர்கள் இ-சட்டங்கள் பகுதியை தலைமை தாங்கினார்.

திரு.ஜெயந்த அவர்கள் ICTA வில் ஆரம்பத்தில் உரையாற்றும் போது 2006 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட இ-பரிமாற்றங்கள் சட்ட இலக்கம் 19 இன் சார்பாக முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் பற்றிக் கூறினார். அத்துடன் நீதித்துறை அமைச்சின் ஒத்துழைப்புடன் சட்ட உருவாக்குவதற்கும் அதன் முன்னெடுப்புக்களை பூரணப்படுத்துவதற்குமான செயற்பாடுகளில் திரு.ஜெயந்த அவர்கள் பணியாற்றியதன் விளைவாக 2007 இல் கணினி குற்றங்கள் தொடர்பான சட்ட இலக்கம் 24 இயற்றப்பட்டது. இந்த இரண்டு சட்டங்களும் சர்வதேச ரீதியிலான நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தன. இ-பரிமாற்றங்கள் சட்டமானது ஐ.நா உடன்படிக்கையான மின்னணு தொடர்பாடலினை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ICTA ஆனது எல்லைதாண்டிய இ-வணிக ஒப்பந்தத்தினைப் பயன்படுத்திய ஓரெயொரு சர்வதேச ஒப்பந்தமாகிய ஐ.நா மின்னணு தொடர்பாடல் உடன்படிக்கையில் இலங்கை ஒப்புதல் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கியது. அதன் மூலம் அவ் உடன்படிக்கையில் பங்கு கொண்ட முதல் தெற்காசிய நாடாகவும், சிங்கப்பூரிற்கு அடுத்தபடியாக ஆசியாவில் இரண்டாவது நாடாகவும் இலங்கை காணப்பட்டது. ஐ.நா உடன்படிக்கையில் ஒப்பந்தமிடுவதற்கு இலங்கைக்கான சாத்தியங்கள் காணப்பட்டன, ஏனெனில் இலங்கை தேவையான சட்டமாகிய மின்னணு பரிமாற்றங்கள் சட்ட இலக்கம் 19 யினை 2006 ஆம் ஆண்டு இயற்றியிருந்தது.

மேலும் நாட்டினுள் இணையவழி குற்ற அமுலாக்க நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவதற்காக இணையவழி குற்றங்களுக்கான வுடாபெஸ்ட் உடன்படிக்கையில் இலங்கையினை இணைப்பதற்கான செயற்பாடுகளை ICTA ஆரம்பித்தது. 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஜரோப்பிய பேரவையால் இணையவழி குற்ற உடன்படிக்கையில் இணைவதற்காக இலங்கைக்கு அழைப்பு விடுத்ததுடன், 2015 ஆம் ஆண்டு மே மாதம் ஜரோப்பிய பேரவையில் இணைவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திட்டது. 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் முதலாம் திகதி வுடாபெஸ்ட் உடன்படிக்கை இலங்கையில் அமுலுக்கு வந்தது. அதன்மூலம் இணையவழி குற்ற உடன்படிக்கையில் இணைந்த முதல் தெற்காசிய நாடாகவும், ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தினையும் இலங்கை பெற்றது. ஜரோப்பிய பேரவையின் படி இணையவழி குற்ற உடன்படிக்கையில் அவ்வளவு வேகமாக எந்தவொரு நாடும் இணைந்திருக்கவில்லை. இலங்கையின் முதன்மையான சட்டமியற்றுதலின் காரணமாக இவ் ஒப்பந்தம் சாத்தியமானது. அதாவது 2007 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட கணினி குற்றங்கள் சட்ட இலக்கம் 24 மற்றும் இணையவழி குற்றங்களுடன் தொடர்புடைய பல கொள்கைகள் இருந்தமையே இதற்கான காரணமாகும்.

கடந்த காலங்களில் உருவாக்கப்பட்ட இவ்வாறான சூழ்நிலைகளின் காரணமாக மிகப்பெரிய இவ்விரு ICT சட்ட ஒப்பந்தங்களில் முழுமையாக உடன்பட்டு உலகளாவிய ரீதியில் ஒரே ஒரு நாடாக இலங்கை காணப்பட்டது.

மேலும் 2005 ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் தீர்வுகளுக்கான சட்ட இலக்கம் 28 மற்றும் கட்டணம் செலுத்தும் சாதனங்கள் மோசடி சட்டம் ஆகியவற்றினை உருவாக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியுடன் சேர்ந்து ICTA ஆனது முக்கியமான வகிபாகத்தினைக் கொண்டிருந்ததாக திரு.ஜெயந்த அவர்கள் கூறினார்.

முன்னோக்கிய பாதை:

அவர் மேற்கொண்ட வேலைகளை மீளாய்வு செய்த திரு.ஜெயந்த அவர்கள், அவர் பல்வேறு துறைகளில் ஈடுபாட்டினைக் காட்டினார். எனவே, அனைத்து பங்குதாரர்களின் தேவைகளையும் புரிந்து கொள்ள வேண்டிய தேவை உள்ளதுடன் பின்னர் நாட்டின் மற்றய பிரிவுகளை கொள்கை சீர்திருத்தத்திற்கு பரிந்துரைக்கவேண்டும் எனக் கூறினார்.

திரு.ஜெயந்த அவர்கள் சட்டம் மற்றும் கொள்கை சீர்திருத்தப் பகுதிகளில் முன்மாதிரியான செயற்பாடுகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார். அத்துடன் CINTEC மற்றும் ICTA வினூடாக பல இலக்குகளை அடைந்ததுடன் நாட்டிற்குத் தேவையான முக்கியமான சட்டங்களை இயற்றுவதற்கு மற்றும் சுற்றுச்சூழலினை மேம்படுத்துவதற்கும் மிகப் பெரிய பங்காற்றியுள்ளார்.

இலங்கை எல்லாவற்றையும் செய்து முடித்து திருப்தியடைய வேண்டும் எனச் சிந்திக்கவில்லை என்று அவர் எச்சரிக்கிறார். அத்துடன் தனியுரிமை மற்றும் தரவுப்பாதுகாப்பு ஆகியவற்றிற்குப் பொருந்தக்கூடிய முன்னிலைப்படுத்தப்பட்ட சட்டங்கள் தேவையெனவும் கூறுகிறார். இது அண்மையில் இயற்றப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் காரணமாக விசேட தேவையுடையதாகின்றது; அதாவது அரசாங்க மற்றும் நிதி நிறுவனங்களால் சேகரிக்கப்படுகின்ற தமது தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படவோ அல்லது தங்கள் அங்கீகாரம் இல்லாமல் பயன்படுத்தவோ முடியாது என ஒவ்வொரு குடிமகனும் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, இரண்டு முதன்மையான உலக தரநிலைகள் இலங்கையில் பரிசீலிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிடுகிறார் – அதில் ஒன்று ஜரோப்பிய பேரவையின் தரவு பாதுகாப்பு உடன்படிக்கை மற்றயது ஐரோப்பிய நாடாளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐரோப்பிய தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை என்பனவாகும்.

தொகுப்பு

no images were found

வளங்கள்

CINTEC Law Committee – Nov 1997
CINTEC Law Committee – Nov 1997 – Pg 2
CINTEC Law Committee – Nov 1997 – Pg 3