நயேனி பெர்னான்டோ அம்மணியார் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் (யூனிவஸிட்டி ஓஃப் சிலோன்) பட்டம் பெற்ற பௌதீக விஞ்ஞானப் பட்டதாரியாவார். இவர் அமெரிக்காவில் ஜோர்ஜ் வோஸிங்டன் பல்கலைக்கழகத்தில் சமூக மற்றும் பொருளாதார புள்ளிவிபர துறையில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றுள்ளார். இவர் இலங்கை கணனி நிபுணர்கள் சங்கத்தின் (CSSL) ஒரு உறுப்பினராவார். மேலும் இவருக்கு, 1993 ஆம் ஆண்டு சொன்ரா கழகத்தினால் பெண் சாதனையாளர் என கௌரவிக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது.
இவர் 1971 ஆம் ஆண்டு தொகை மதீப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் ஒரு நிரலாளராக தகவல் தொழினுட்பத் துறையில் தனது தொழிலினை ஆரம்பித்ததுடன், 1978 இருந்து 2000 வரையான காலப்பகுதியில் மத்திய வங்கியிலும் கடமையாற்றினார். இவர் 1988 இல் இலங்கை தன்னியக்க காசோலைத் தீர்வகத்தினை (SLACH) நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாகவிருந்ததுடன் அதன் முகாமையாளராக ஆறு வருடங்கள் பணியாற்றினார்.
1993 இல் ஆஃப்லைன் நிதி பரிமாற்றும் முறைமையினையும் SLIPS (இலங்கை இன்ரபேங்க் பேமென்ற் சிஸ்டம்) அறிமுகப்படுத்தும் செயன்முறையினை ஆரம்பித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு தலைமைத்துவத்தினையும் வகித்தார். 1994 ஆண்டு முதல் 2000 வரையான காலப்பகுதியில் மத்தியவங்கியின் தகவல் தொழினுட்பத் துறையின் பணிப்பாளராகவும் பணியாற்றினார்.
1996 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் மீது நடத்தப்பட்ட தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலின் பின்னர் அதனை விரைவாக கட்டியெழுப்புவதற்காக தகவல் தொழினுட்பத் துறைக்குத் தலைமைத்துவம் வழங்கினார், இத் தாக்குதலில் வங்கியின் கணனித் தொகுதிகள் முழுமையாக அழிக்கப்பட்டன. மேலும் இவர் Y2K தயார்நிலைக்கான இலங்கை குழுவில் நிதிப்பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் சேவையாற்றினார்.
இவர் ஓய்வு பெற தகுதியான வயதினை அடைந்ததன் காரணமாக 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய வங்கியின் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.
இவர் 2000 ஆம் ஆண்டு முதல் 2002 வரையான காலப்பகுதியில் இலங்கை வங்கியின் தகவல் தொழினுட்ப ஆலோசகராகவும் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு முதல் 2008 வரையான காலப்பகுதியில் தனியார் துறையில் தகவல் தொழினுட்ப ஆலோசகராகவும் பணியாற்றினார்.
இவர் 2008 ஆம் ஆண்டு முதல் 2011 வரையான காலப்பகுதியில் பங்களாதேஸ் நாட்டின் மத்திய வங்கிக்காக நாடளாவிய ரீதியில் செயற்படத்தக்க இலத்திரனியல் காசோலைத் தீர்வு முறைமை மற்றும் இலத்திரனியல் பணப்பரிமாற்ற வலையமைப்பு (எலக்ரோனிக் செக் கிளியரிங் சிஸ்டம் மற்றும் எலக்ரோனிக் பன்ட் ட்ரான்ஸ்பர் நெட்வேர்க்) ஆகியவற்றினை நிறுவுவதற்காக தள திட்ட முகாமையாளராக செயற்பட்டார், அத்துடன் 2010 இல் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தினார். நயேனி பெர்னான்டோ அம்மணியார் கணனி நிபுணத்துவ சங்கத்தின் ஸ்தாபக உறுப்பினராவார். அத்துடன் அதன் சபையின் துணைத் தலைவராக 1993 ஆம் ஆண்டிலிருந்து 1995 வரை சேவையாற்றினார்.
நயேனி பெர்னான்டோ அம்மணியாரின் பெயரானது இலங்கை மத்திய வங்கி மற்றும் வங்கித் தொழிற்துறையில் தகவல் தொழினுட்பத்தின் நடைமுறைப்படுத்தலுடன் ஒப்புவிக்கப்படுகின்றது அத்துடன் 20 ஆண்டுகளுக்கு மேலாக பல இலக்குகளை அடைய உதவிய கருவியாக இவள் இருந்தாள்.
சுருக்கமான காணொளி
முழுமையான காணொளி
கல்வி
கொழும்புப் பல்கலைக்கழக, விஞ்ஞான பீடத்தின் ஒரு இளநிலைப் பட்டதாரியாக, பின்னாளில் “இலங்கையில் தகவல் தொழினுட்பத்தின் தந்தை” என அழைக்கப்பட்ட பேராசிரியர் சமரனாயக்க அவர்களிடம் கற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இவரது ஆய்வுகள் தகவல் தொழினுட்பத்தில் தனது தொழிலை பகுப்பாய்வு நிரலாளர் (அனெலிஸ்ட் புரோகிராமர்) மற்றும் தர்க்க ரீதியாக சிந்திக்ககூடிய திட்ட முகாமையாளராக பணியாற்றவும் பயனளித்தன.
தொகை மதீப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம்
நயேனி பெர்னான்டோ அம்மணியார் தகவல் தொழினுட்பத்துறையில் உள்நுழைந்ததானது முன்னரே திட்டமிடப்பட்டதல்ல. தொகை மதீப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கு இணங்க விண்ணப்பிக்குமாறு நண்பரொருவரினால் வலியுறுத்தப்பட்டார். இவர், விண்ணப்பித்த 400 பேரில் தெரிவு செய்யப்பட்ட ஆறு பேரில் ஒருவராக காணப்பட்டார்.
இது நடைபெற்றது 1971. பெர்னான்டோ அம்மணியாருக்கு நிரலாக்கம் மற்றும் தரவு செயலாக்கத்தில் (புரோக்கிராமிங் மற்றும் டேரா புரோஸஸிங்) எந்தவித முன்னறிவும் இருந்திருக்கவில்லை. தொகை மதீப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட நிரலாளர்கள் RPG கணனி மொழியினது (ரிப்போரட் புரோகிராம் ஜெனரேட்டர்) குறியீட்டாக்கத்தினை கற்பதற்காக காலை வேளைகளில் IBM நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டனர்.
இவர் 1991 இல் நடைபெற்ற சனத்தொகை மதிப்பீட்டு மாதிரிகளை ஆராய்வதற்காக திணைக்களத்தில் பணியாற்றிய மற்றய நிரலாளர்களுடன் சேர்ந்து கணினி நிரல்களை நிறுவி அதனை பரிசோதித்தார்.
தொகை மதீப்பீடு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தில் காணப்பட்ட கணினிச் சுழல் IBM சிஸ்டம்/360 மிட்-ரேன்ச் கணனி ஆகும். கணனியின் நினைவகம் ஆனது 24 KB. இயங்குதளமானது (OS) ரேப் ஓஸ் மற்றும் கணினி நிரல்கள் ஆனது பஞ்ச்ட் இன்ரு காட்ஸ். அதாவது பஞ்ச் காட்ஸ். பின்னர் கணனிகளின் இயங்குதளமானது டிஸ்க் இயங்குதளத்திற்கு தரமுயர்த்தப்பட்டது. திணைக்களத்தில் தொகைமதிப்புகள் மற்றும் கணக்கெடுப்புகள் சார்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கணினி நிரல்களை எழுதுவது பிரதான வேலையாக இருந்தது. இவ் வேலைகளுக்கு பிரதானமாக பயன்படுத்தப்பட்ட கணினி மொழிகளாக ஆர்பிஜி (RPG) அத்துடன் கோபோல், போர்றான் மற்றும் அசெம்பிளர் (COBOL, FORTRAN மற்றும் ASSEMBLER) ஆகியவற்றினைக் குறிப்பிடலாம்.
இலங்கை மத்திய வங்கி
நயேனி பெர்னான்டோ அம்மணியார் இலங்கை மத்திய வங்கியில் 1978 ஆம் ஆண்டு பகுப்பாய்வு நிரலாளராக இணைந்தார்.
இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டபோது இவர் இரு “முதன்மை” களைப் பெற்றுக் கொண்டார். அதாவது, தரவு செயலாக்கப் பிரிவிற்குத் தெரிவு செய்ப்பட்ட முதல் வெளிவாரி பணியாளர் மற்றும் முதல் பெண் பகுப்பாய்வு நிரலாளர் ஆகியனவாகும்.
இங்கு ஆரம்பத்தில் மத்திய வங்கியினது அரச கணக்குகள் கிளையினை (GAB) கணனிமயப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்தார். மத்தியவங்கியின் தரவுகளை உள்ளீடு செய்யும் பிரிவானது 25 வாங்க் (Wang) PCS II இயந்திரங்களைக் கொண்டிருந்தது. நயேனி பெர்னான்டோ அம்மணி பேஸிக் (BASIC) மொழியினைப் பயன்படுத்தி ஒரு சிறந்த தீர்வினை GAB ற்கு வழங்க முடிந்தது இதன்மூலம் துரிதமாக, மிக விரிவான மற்றும் குறைவான நேரத்தில் தரவுகளை பெறக்கூடியதாக இருந்தது.
இலங்கை தன்னியக்க காசோலைத் தீர்வகம் (SLACH)
இவருக்கு SLACH இனை நிறுவுவது முக்கியத்துவமான இலக்காக இருந்தது. இலங்கையில் தன்னியக்க காசோலை தீர்வகத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு நயேனி பெர்னான்டோ அம்மணியார் நியமிக்கப்பட்டார். அதுவரை, காசோலைகள் தீர்வு செயன்முறையானது கைமுறையாக மேற்கொள்ளப்பட்டதுடன் அது கடினமான மற்றும் அதிக நேரத்தினை எடுத்துக் கொள்ளும் செயன்முறையாக இருந்தது.
இதற்காக மத்திய வங்கியானது நயேனி பெர்னான்டோ அம்மணியாரை சிங்கப்பூர் நாணய நிதியத்தின் வங்கி கணனி சேவைகள் பிறைவற் லிமிடெட் நிறுவனத்தினால் செயற்படுத்தப்படுகின்ற சிங்கப்பூர் காசோலைத் தீர்வகத்திற்கு பயிற்சி பெறுவதற்காக அனுப்பியது. நயேனி பெர்னான்டோ அம்மணியார் இலங்கைக்குத் திரும்பிய பின்னர் முன்னர் செய்த அதே செயற்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அவரது குழுவில் திரு.ஜஸ்டின் விக்ரமசிங்க, திரு. ஆரியவன்ச ஆகியோரை செயற்பாட்டு முகாமையாளர்களாகவும் அத்துடன் திரு.சி.வி.பத்வெரிய மற்றும் திரு சுனிமால் ஆகியோரை பகுப்பாய்வு நிரலாளர்களாகவும் உள்ளடக்கியிருந்தார். இதன் விளைவாக 1988 ம் ஆண்டு பங்குனி மாதம் 2ம் திகதி SLACH நடைமுறைப்படுத்தப்பட்டது.
இவ் SLACH நடைமுறைப்படுத்தப்பட்டதனால் வங்கிகளது காசோலைத் தீர்வகப்பிரிவினது வேலைப்பழுவானது பாரிய அளவில் குறைக்கப்பட்டது. காசோலைத் தீர்வு காணலுக்கு எடுக்கும் நேரமும் பாரிய அளவில் குறைக்கப்பட்டது. அதனால் நாட்டில் தீவிரவாதிகளின் பிடியிலிருந்த பகுதிகள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் ஒரு வருட காலமாக காணப்பட்ட காசோலைத் தீர்வுகள் ஒன்று முதல் மூன்று நாட்களில் தீர்க்கப்பட்டது. SLACH ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து 1994 வரையான காலப்பகுதியில் அதன் முகாமையாளராக நயேனி பெர்னான்டோ அம்மணியார் பணியாற்றினார்.
SLIPS
இலங்கையிலுள்ள வங்கிகளுக்கிடையில் கட்டணம் செலுத்தும் முறைமை (SLIPS) நயேனி பெர்னான்டோ அம்மணியாரால் 1993 இல் ஆரம்பிக்கப்பட்ட மற்றுமொரு முக்கியமான செயற்றிட்டமாகும். ஆரம்பத்தில் குறைந்த மொத்தக்கட்டணத்திற்கான ஓஃப்லைன் பணப்பரிமாற்ற முறைமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது.(பின்னர், 2010 இல் SLIPS ஆனது ஓன்லைன் வங்கிக் கட்டணம் செலுத்தும் முறைமையாக தரமுயர்த்தப்பட்டது) இவ் வசதியானது பயனுள்ளதாகக் காணப்பட்டது, அதிலும் விசேடமாக சம்பளக் கொடுப்பனவுகளுக்கு மிகப் பயனுள்ளதாகக் காணப்பட்டது. மத்திய வங்கியானது இலங்கையிலுள்ள வங்கிகள் சங்கம் இணங்கியதற்கிணங்க வழங்கிய நிதி மற்றும் பின்னாளில் இலங்கை வங்கியின் பிரதி பொது முகாமையாளராகவும் இருந்த திரு.சிவஞானநாதன் அவர்களின் அனுசரணையுடனும் SLIPS னை நடைமுறைப்படுத்தியது. முதல் நாளில், ஆறு பண சந்தைப் பரிமாற்றங்களுடன் இச் செயற்றிட்டமானது ஆரம்பிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்குள் பரிமாற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக வன்பொருளை தரமுயர்த்தவேண்டி ஏற்பட்டது. தற்போது SLIPS ஆனது தினசரி உச்சரிப்புச் சொல்லாக உள்ளது. CBSL அணியினர் மற்றும் BC கணனிகள் தீர்வு வழங்குனர் ஆகியோர் மேற்கொண்ட வேலைகளுக்காக அவர்களை பெருமையுடனும் மற்றும் பாராட்டுக்களுடனும் நயேனி பெர்னான்டோ அம்மணியார் நினைவுபடுத்துகின்றார். மேலும், பல வங்கிகளிடமிருந்து பிரதிநிதித்துவம் பெற்ற SLIPS குழுவால் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை அவர் பாராட்டுகிறார்.
நயேனி பெர்னான்டோ அம்மணியாரின் மற்றய குறிப்பிடத்தக்க தருணமாக, 1994 ஆம் ஆண்டு SLAC இலிருந்து தகவல் தொழினுட்பப் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதனைக் குறிப்பிடலாம். இலங்கை மத்திய வங்கியில் தகவல் தொழினுட்பப் பிரிவிற்கு பொருத்தமான தகைமையுடைய ஒருவரை நியமிக்க வேண்டும் என்பதற்காக இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இது ஒரு திருப்புமுனையாக இருந்தது, ஏனெனின், பின்னர் IT துறைக்கு தலைமை தாங்கியவர்கள் தேவையான பின்புலத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டனர், மேலும் இது CBSL இல் IT கையாளப்பட்ட வழிமுறையை மாற்றியது.
தீவிரவாத நடவடிக்கைகளினால் ஏற்பட்ட விளைவுகள் மற்றும் நாட்டின் ஊழியர் சேமலாப நிதி முறைமை மீட்பு
இது நாட்டின் நினைவகத்தில் மற்றொரு ஆழமான வடு ஆகும். 1996 ஆம் ஆண்டு தை மாதம் 31 ஆம் திகதி LTTE யினால் மேற்கொள்ளப்பட்ட ஆபத்தான வெடிகுண்டு தாக்குதலினால் இலங்கை மத்திய வங்கியில் பலர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயத்திற்குட்பட்டதுடன் பலர் முழுமைமாக பார்வையிழந்தனர். இதனால் இலங்கை மத்திய வங்கியின் கணனி தொகுதிகள் முழுமையாகப் பாதிப்படைந்தன.IBM 4300 கணனி தொகுதி மற்றும் தரவு உள்ளீடு செய்யும் பகுதி ஆகியவற்றினைக் கொண்ட கட்டிடம் முழுமையாக அழிக்கப்பட்டது. அனைத்தும் இழக்கப்பட்டது. ஆனால் தகவல் தொழினுட்பப்பிரிவில் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை ஆயினும் பலர் காயமடைந்தனர். மேலும் நயேனி பெர்னான்டோ அம்மணியாரின் தலைமையினால் கணனி தொகுதிகள் மற்றும் நாட்டின் அனைத்து பணியாளர்களினதும் தேவையாகிய ஊழியர் சேமலாப நிதியினை இயக்கும் ஆப்ளிகேசன் ஆகியவற்றினை சீர்செய்யும் முக்கியமான பணி முன்னெடுக்கப்பட்டது.
நாட்டின் ஊழியர் சேமலாப நிதி முறைமையினை இயக்கும் பொறுப்பு இலங்கை மத்திய வங்கியினுடையதாகும். இதற்காக எந்தவொரு ஓன்லைன் காப்புப்பிரதிகளும் இருக்கவில்லை – ராஜகிரியவில் உள்ள பயிற்சிப் பாடசாலையில் சேமிக்கப்பட்ட தரவு நாடாக்கள் இருந்தன. அப்போது நயேனி பெர்னான்டோ அம்மணியாருக்கு இருந்த முக்கிய பணி இவ் ஊழியர் சேமலாப நிதி முறைமையினை செயற்படுத்துவதே ஆகும். ஆகவே, ஒரு ஏ.ஸ்/400 கணனி தொகுதி கொள்வனவு செய்ய உடனடியாக ஆணையிட்டதுடன், இலங்கை மத்திய வங்கியின் பிரதி பணிப்பாளராகவிருந்த திரு.என்.எம்.ஜெயசேகர அவர்களிடம் அவ்முறைமையினை மீளவடிவமைக்கும் பணிகளை வழங்கினார் ஆனால் இதற்கு ஆவணமேதும் இருக்கவில்லை. திரு.என்.எம்.ஜெயசேகர தனது அறிவினைக் கொண்டு நயேனி பெர்னான்டோ அம்மணியார் மற்றும் திரு.சி.வி.பாத்வேரிய ஆகியோருடன் சேர்ந்து புதிய கணினி தொகுதியில் தேவையான ஆப்ளிகேசனை வடிவமைக்க பொறுப்பாகவிருந்தார்.
அந்த கடினமான காலத்திலும் உதவி செய்தவர்கள் இருந்தனர் – ஐ.பி.எம் இன் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த திரு.ஜோன் பெர்னாண்டோ அவர்களின் முயற்சியால் அழிக்கப்பட்ட ஐ.பி.எம் கணினி தொகுதி போன்ற இன்னொன்று கிடைக்கக்கூடியதாயிருந்தது. பேராசிரியர் வி.கே. சமரனாயக்க அவர்கள் இக் கணனி தொகுதியினை பொருத்துவதற்கான இடத்தினை கொழும்பு பல்கலைக்கழகத்தில் வழங்கி உதவினார்.
இது மூல தரவு நாடாக்களை செயற்படுத்துவதற்கும், புதிய கணனி தொகுதியான ஐ.பி.எம் ஏ.ஸ் 400 இல் புதிய ஆப்ளிகேசனுக்கு தரவுகளை இடமாற்றுவதற்கும் பயன்பட்டது. அத்துடன் 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் யூஸ்எயிட் (USAID) மானியத்துடன் புதிய ஏ.ஸ் 400 கணனி தொகுதி கொள்வனவு செய்யப்பட்டு உலக வர்த்தக மையத்தினை தற்காலிக இடமாகக் கொண்டு நாட்டினது ஊழியர் சேமலாப நிதி முறைமையைக் கொண்ட அப்ளிகேசன் அக் கணனியில் நிறுவப்பட்டது. நயேனி பெர்னான்டோ அம்மணியார் மற்றும் அவரது குழுவினரின் இவ் வெற்றிக்குரிய செயற்பாட்டினால் இலங்கையின் 50 வது சுதந்திர தினத்தன்று பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் வைத்து ஊழியர் சேமலாப நிதி நிலுவைத் தரவுகள் பயனர்களின் பார்வைக்காக ஒன்லைனில் விடப்பட்டது.
நடைமுறைப்படுத்தப்படாத சில செயற்திட்டங்கள்
1994 ஆம் ஆண்டு தகவல் தொழினுட்பப் பேரவை (CINTEC), தகவல் தொடர்பாடல் தொழினுட்ப பின் உச்ச நீதிமன்றம் ஆகியன நிதித்துறை பணிக்குழுவினை தோற்றுவித்தன. அத்துடன் இக்குழுவின் பிரதான பணியாக நாட்டினுள் பணப்பரிமாற்றங்களை நிகழ்த்துவதற்காக வெளிவாரி சுவிட்ச்சினூடாகச் செல்லாதவாறு பொதுவான ஒரு ஏடீஎம் சுவிட்ச்சினை அமைப்பதாகும்.
நயேனி பெர்னான்டோ அம்மணியார் இச் செயற்றிட்டத்திற்குப் பொறுப்பாகவிருந்தார்.இது நாட்டிற்கான அந்நிய செலாவணியைச் சேமிப்பதாக அமைந்திருக்கும் ஆனால் சில வங்கிகள் அந்நேரத்தில் அவர்களின் போட்டியிடும் அனுகூலத்தினை இழக்க நேரிடும் என்பதால் இப் பெறுமதியான செயற்றிட்டத்தினை செயற்படுத்துவதற்கு பங்கேற்க இணங்கவில்லை. பல வருடங்களின் பின்னரே பொதுவான ஒரு ஏ.டீ.எம் சுவிட்ச் நிறுவப்பட்டது.
Y2K
எல்லா கணினி நிரல்களையும் 1999 இலிருந்து 2000 ற்கு மாற்றும் போது இரட்டைத் தான திகதி வடிவம் பயன்படுத்தப்படுவதால் அவை செயலிழக்க நேரிடும் என நம்பப்பட்டது. நயேனி பெர்னான்டோ அம்மணியார் மற்றும் அவரது அணியினர் 1997/98 இல் தமது கணினி நிரல்களை சரிசெய்தனர், ஆனாலும் இது ஒரு உலகளாவிய ரீதியான பிரச்சினையானமையால் இலங்கை மத்திய வங்கியினது ஆளுநரின் அறிவுரைக்கமைய பேராசிரியர் வி.கே. சமரனாயக்கவின் கீழ் Y2K தயார்நிலை குழுவானது உருவாக்கப்பட்டது. நிதிப்பிரிவிற்கான Y2K தயார் நிலையை கண்காணிப்பதற்குப் பொறுப்பாக பெர்னான்டோ அம்மணியார் இருந்தார். இருந்தபோதிலும் எந்த வித பிரச்சினைகளுமில்லாமல் இலங்கை 2000 ஆண்டிற்குள் வெற்றிகரமாய் நுழைந்தது. அதன்பின் நயேனி பெர்னான்டோ அம்மணியார் வயது முதிர்ந்ததனால் ஓய்வு பெற விரும்பினார் அத்துடன் மத்திய வங்கியில் 20 வருட சேவையைப் பூர்த்தி செய்தார்.
தனியார் துறைக்கு மாறுதல்
நயேனி பெர்னான்டோ அம்மணியார் இலங்கை வங்கியில் ஒரு தகவல் தொழினுட்ப ஆலோசகராக இரு வருடங்கள் கடமையாற்றிய பின்னர், இன்போமெற்றிக்ஸ் பிறைவட் லிமிடெட் இல் தகவல் தொழினுட்ப கல்விப்பிரிவில் கடமையாற்றினார். மாத்தளை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலக ஊழியர்களுக்காக இன்போமெற்றிக்ஸ் நடத்திய தகவல் தொழினுட்ப பயிற்சியானது நயேனி பெர்னான்டோ அம்மணியார் ஈடுபட்ட முக்கிய செயற்திட்டமாகும். இது இலங்கை தகவல் தொடர்பாடல் தொழினுட்ப நிறுவனத்தினால் (ICTA) 2003 ஆம் ஆண்டு ICTA வின் ஆரம்பத்திற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட முக்கிய செயற்றிட்டமாகும்.
இச் செயற்றிட்டத்திற்காக இன்போமெற்றிக்ஸின் எதிர்கால குழந்தைகள் பிரிவிற்கு (Future Kids division) ICTA விருது வழங்கியது. இப் பயிற்சியின் பின்னர், கலந்துகொண்ட ஊழியர்களின் ஒவ்வொரு பிரதேச செயலகங்களுக்கும் அவர்களது அன்றாட வேலைகளில் பயன்படுத்துவதற்கான மாதிரி அப்ளிகேஸன்கள் நிறுவப்பட்ட இரு கணினிகள் வழங்கப்பட்டது ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.அவர்களிடம் ஒரு தனிப்பட்ட கணனி மற்றும் ஒரு அப்ளிகேசன் இருந்தது, அதனை அவர்களது உற்பத்திப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்த முடிந்தது. பின்னர் நயேனி பெர்னான்டோ அம்மணியார் BC கம்பியூட்டர் பிறைவெற் லிமிடெட்ற்கு மாறினார். இந்த நிறுவனம் பங்களாதேச நாட்டின் காசோலை தீர்வு முறைமையினை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டத்தினைப் பெற்றுக் கொள்ள விரும்பியது.இவ் முயற்சி BC கம்பியூட்டர்ஸிற்கு வெற்றியளிக்கவில்லையாயினும் பெர்னான்டோ அம்மணியாருக்கு பங்களாதேசத்தில் காசோலை தீர்வு முறைமையினை நடைமுறைப்படுத்தும் செயற்றிட்டத்தில் ஒன்சைட் செயற்றிட்ட முகாமையாளராக பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. பங்களாதேஷ் வங்கி தன்னியக்க காசோலை தீர்வு முறையினை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியது, 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ம் திகதி இலத்திரனியல் முறையை கொண்டுவந்தது மற்றும் ஒரு இலத்திரனியல் பணப்பரிமாற்ற முறைமையினை மிக விரைவில் நடைமுறைப்படுத்தியது.
இலங்கை கணனிச் சமூகம் (CSSL)
CSSL ஆனது 1976ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. நயேனி பெர்னான்டோ அம்மணியார் இத் தொழிற்சங்கத்தின் ஸ்தாபக அங்கத்தவராக இருந்ததுடன் மூன்று வருடகாலம் துணைத் தலைவராகவும் இருந்தார், பின்னர் இலங்கை தகவல் தொழினுட்பத் தொழில்துறைக்கு மற்றும் இலங்கைக் கணனிச் சமூகத்தின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு அவர்களின் சிறந்த பங்களிப்பிற்காக இலங்கைக் கணனிச் சமூகத்தினால் வழங்கப்படுகின்ற உயரிய விருதான “த ஸ்ரேற்றஸ் ஓப் த ஃபெலோ” விருதினையும் பெற்றார். CSSL ஆனது 1986 ஆம் ஆண்டு SEARCC இல் அங்கத்துவத்தினைப் பெற்றது.
நயேனி பெர்னான்டோ அம்மணியார் அவருடைய தொழில் வாழ்க்கையில் முக்கியமான இலக்குகளை அடைந்துள்ளார், அத்துடன் அங்கீகாரம் பெற்றுக் கொள்வதில் மற்றும் கல்வி, திறமை, செயல்திறன், கடின உழைப்பு, மற்றவர்களைப் பாராட்டுவதற்கு விரும்புதல் மற்றும் மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளல் ஆகியவற்றின் மூலம் முற்றிலும் நேர்மறையான வேறுபாடுகளை உருவாக்குதல் மற்றும் “கண்ணாடியின் கூரங்கள்” என்று கூறுகின்றவாறு அவர் உயர் மட்டத்தை அடைவதிலிருந்து தடுக்கப்படவில்லை.
Gallery